Browsing எண் கணிதம்

பெயரின் விளக்கம்

January1

நம் ஆயுள் முடியும் வரை நம்மை அழைக்கப் படும் அடைச் சொல் தான் பெயர். நம்மை அடையாளம் கண்பதற்கு பெயர் மிக முக்கியமான ஒன்று. நம்மை அழைக்கும் போது குறிக்கும் போதும் உச்சரிக்கப் படும் ஒலி அலைகளின் அதிர்வுகள் நம்மை ஆள்கின்றது. உச்சரிப்பு மாறுப்படும் போது தோன்றும் ஒலி அலைகளின் அதிர்வுகளும் மாறுப்படும். அந்த ஒலி அலைகளின் அதிர்வுகளைதான் நம் மொழி என்று குறிப்பிடுகின்றோம். அதை தான் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் ஒலி அலைகளின் அதிர்வுகளைக் கொண்டு அதற்கு கிரகங்களுக்கிடையே இருக்கும் இணைப்புகளை கண்டறிந்தார்கள். பிறகு இறைவனின் உண்மை நிலை அடைய வேத மந்திரத்தையும் மனிதனின் நன்மைக் காக்கும் தாந்திரீக மந்திரங்களையும் உருவாக்கி உபயோகம் செய்ந்தனர். சிலர் தீய செயல்களை செய்ய புராண மந்திரம் என்று சொல்லப்படும் மந்திரந்தை உபயோகித்தனர்.
நம் கோவில்களுக்குச் சென்று அர்ச்சனைச் செய்யும் போது நம் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசி போன்றவற்ற கேட்டு கோவில் குருக்கள் நமக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய மந்திரத்தை உச்சரிப்பார். உச்சரிக்க படும் மந்திரம் நம்மை வந்து சேர நம் பெயர், பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தையும் பயன்படுத்தப் பட்டது. அப்படி செய்யும் போது நம் உடலுக்கு நன்மைத் தரக் கூடிய ஒலி அலைகளின் அதிர்வுகள் நம்மை வந்து சேருகின்றது என்வது ஐதிகம். மந்திரங்கள் என்று சொல்லும் போது மிக முக்கியமாக கூற வேண்டிய ஒன்று “ஓம்” என்ற பிரணவ ஒலி. இந்த ஒலி அலைகளின் அதிர்வுகள் இறைவனின் வடிவத்தை குறிக்கின்றது. அதாவது படைத்தால், காத்தல், அழித்தல் என முத்தொழில்களை ஆளும் பிரம்மன், விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளை பிரதிபலிக்கும் ஒலி. ஆதியும் அந்தமும் அற்றது “ஓம்” என்ற ஒலி அலைகளின் அதிர்வுகள். இதைப் பற்றி மேலும் சொல்லிக் கொண்டே போனால் இது “மந்திரக்கலை” என்ற கட்டுரையாக ஆகிடும். எனவே, அந்தோடு நிறுத்திக் கொண்டு எண் கணிதத்திற்கு வருவோம். தொடர்ந்து… இப்போது இருக்கும் நவீன யுக்திகள் அப்போது இல்லாத காரணத்தாலும் தமிழ் மொழியின் இருக்கும் எழுத்துக்களுக்கான சப்தட்தின் ஒலி அலைகளின் அதிர்வுகளை சரியாக ஆறியாத காரணத்தாலும் ஜாதக பஞ்சாகப்படி ஒருவரின் நட்சத்திரத்தை குறிக்கும் எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக வைத்தனார். பிறகு அரிச்சனை செய்வதன் மூலம் தான் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் வந்து சேரும் என்று கருதப்பட்டது.

நீளமாக பெயர் அமைந்தவர்களை அழைக்கும் போது அப்பெயரினை சுருக்கி அழைக்க பட்டால். அந்த நீளமான பெயரின் பலன் நிச்சயம் மாறுபடும். அதேசமயத்தில் சுருக்கி அழைக்கப் படும் பெயரின் பலன் அவர்களை ஆளும். உதாரணத்திற்கு.. kamalhaasan என்ற பெயர் உடையவரை kamal என்று அழைக்கும் போது அந்த பெயர் எண்ணுக்கான தன்மையும் வாழ்க்கை பாதை மாற்றமும் ஏற்படும். சிறு வயதில் (1 – 20) ஒருவருக்கு முதல் எழுத்தின் ஆளுமையே அதிகம் இருக்கும். பிறகு 21 வயதிற்கு மேல் அவர், அவரின் பெயரை எழுத்து வடிபத்தி அதிகம் உபயோகித்தார் என்றால் அந்த பெயரின் எழுத்துக்களின் கூட்டு எண்ணும் அவர்களை ஆளும்.

மனிதர்களை ஆளும் எண்கள்

January1

1 – 9 எண்கள் உலகை ஆள்கின்றன.

ஒரு மனிதன் 9 – 10 வகையில் எண்கள் ஒருவரை ஆள்கின்றது.
அவைகள்:-
1. பிறந்த தேதி
2. பிறந்த மாதம்
3. பிறந்த வருடம்
4. பிறந்த கிழமை
5. பிறந்த நேரம் (இரவு/பகல்)
6. பிறந்த தேதி+மாதம்+வருடம் (கூட்டு எண்)
7. பெயரின் முதல் எழுத்தின் எண்
8. பெயரின் கூட்டு எண்
9. அழைக்கும் பெயரின் சப்தத்தின் எண்/ கூப்பிடப் படும் பெயர்களின் ஒலியின் எண்.
எ.கா: அம்மா/அப்பா/அய்ய/தோழ/தோழி/மச்சான்/மாமா/அத்தை/சித்தி/சித்தப்பா/அண்ணன்/அக்கா/தம்பி/தங்கை போன்றவை.
10. வழக்கமாக அழைக்கப் படும் பெயரின் சப்தம். (Nick Name)

இந்தனை வகைகளில் கிரகனங்கள் ஒருவரை ஆளப்படுவதனால் தான், அவர் மனிதர்களுக்கிடைய சுமுகமாகவும் சந்தோசமாகவும் செயல் பட முடிகின்றது. மேலும், ஒருவர் தன் வாழ்கையில் எல்லாம் விஷியத்திலும் வெற்றியுடன் வாழ எல்லாம் கிரகங்களின் துணை நிச்சயம் தேவை. ஒருவேலை கிரகங்களின் மின்சக்தி குறைத்தாலும் சரி, அதிகரித்தாலும் சரி அதற்கான தாக்கங்கள் அவர் பெறுவதும் உறுதி.

ஆனால்,

அதில் ஐந்து (5) வகைகள் மட்டும் மிக முக்கியமானவை, அதவது அந்த ஐந்து வகைகள் என்பது ஒருவரை மிக அதிகமாக ஆளப்படும் எண்.
அவைகள்:-
1. பிறந்த தேதி( குண நலங்களை சித்தரிக்கும் எண்) [ Character Number )
2. பிறந்த தேதி+மாதம்+வருடம் (கூட்டு எண்/விதி எண்) [ fate Number ]
3. பெயரின் முதல் எழுத்தின் எண் (ஒரு எழுத்தின் எண்) [ First Letter of Name]
4. பெயரின் கூட்டு எண் ( The Name as appears in Birth Certificate)
5. ஒருவரை வழக்கமாக அழைக்கப்படும் பெயரின் சப்தம். (Nick/Pet Name)

மேற்கண்ட ஐந்து (5) வகைகளில் ஒருவரை ஆளப்படும் எண்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் உண்டு.

இந்த ஐந்து (5) வகைகளில் ஒன்றோ அல்லது இரண்டு எண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்களோ ஒருவருக்கும் இன்னொருவருக்கும் நட்பு எண்களாக அமைந்து விட்டால், அந்த இருவரும் ஒருவருக்கொருவர் பழகும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் இணைப்பிரியாத நண்பர்களாகவும் அல்லது நல்ல காதலர்களகாவும் / நல்ல தம்பதிகளகாவும் ஆகி விடுவர்கள்.

அதே சமயத்தில் அவ்வகைகளில் ஒன்றோ அல்லது இரண்டு எண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்களோ ஒருவருக்கும் இன்னொருவருக்கும் பகையாக அமைந்து விட்டால், அந்த இருவரும் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போதும் அல்லது பேசும் போதும் அவர்களுக்கிடையே அவர்களை அறியாமலேயே கருத்து வேறுப்படு மற்றும் வெறுப்புணர்ச்சி உண்டாகும்.

ஒருவரின் பொதுவான குணங்கள் எப்படி இருப்பினும் சரி. அவரது சில குணங்கள் மட்டும் அவருடைய பெற்றோர்களின் மரபணு எனப்படும் ()ஜீன்ஸ் பிரகாரம் அமையும். ஒருவர் பூமியில் எங்கு பிறந்திருந்தாலும் சரி அவருக்கு மேற்கூறிய விஷயமே உண்மையாக இருக்கப்படும்.

ஒரே எண்ணி பிறந்த இருவரின் இயல்புகள் ஒன்றாக இருப்பினும் அவர்களது பெற்றோர்களின் மரபணு, சுற்றுப்புற சூழ்நிலை, சமூக நடத்தை, பிறந்த இடத்தின் பருவ நிலை ஆகியவற்றை பொறுத்தே அவர்களின் செயல்பாடுகளும் பழக்க வழக்கங்களும் மாறுப்படும்.

அப்படி எல்லம் அம்சங்களும் ஒரே மாதிரி அமைந்தால் கூட, அவரின் பெயரின் முதல் எழுத்தும் கூட்டு எழுத்தும் மற்றும் அவர்களை அழைக்கபடும் பெயர்களின் சப்தமும் வேறுபடுமானால் அவர்களின் செயல்படுகள் மட்டுமின்றி வாழ்கையும் மாறுப்படும்.

எண் கணிதத்தில் கணக்கிடும் முறைகள்

January1

1) பிறந்த நாள்(DATE OF BIRTH) ( பிறந்த எண், கூட்டு எண், பிறந்த மாதம், பிறந்த வருடம், பிறந்தக் கிழமை மற்றும் பிறந்த நேரம்)
2) பெயர் (NAME)
3) வியாபார நிறுவனத்தின் பெயர் (COMPANY NAME )
4) வாகனத்தின் எண் (NUMBER OF VEHICLES/PLATE) (மொட்டார் சக்கிள்/மொட்டார்வண்டி)
5) வீட்டின் எண் (HOME NUMBER)

பிறந்த நாளைக் கணக்கிடும் முறை.
பிறந்த எண் மற்றும் கூட்டு எண்ணையும் கணக்கிடும் முறைகளைப் பார்ப்போம்:-
பிறந்த எண் (உடல் எண்) = தேதிகளை கூட்டுதல்
கூட்டு எண் (உயிர் எண்) = பிறந்த தேதி + மாதம் + வருடம்

எ.கா: ஒருவரின் பிறந்த நாள் 24-05-1985 வெள்ளி கிழமை நேரம் காலை மணி 9 என்று வைத்துக் கொள்வோம்.

பிறந்த எண் = 24 > 2 + 4 = 6
கூட்டு எண் = (24) 6 + 5 = 2 1+9+8+5 = 5
= 2 + 5
= 7
பிறந்த மாதம் = 0 + 5 = 5
பிறந்த வருடம் = 1+9+8+5 = 5
பிறந்தக் கிழமை = வெள்ளிக்கிழமை = 6
பிறந்த நேரம் = காலை மணி 9 = 9 சூரியன் உதயத்திற்கு பிறகு = சூரியன் = 1

பிறந்த எண்= 6
கூட்டு எண்= 7
பிறந்த மாதம்= 5
பிறந்த வருடம்= 5
பிறந்த கிழமை= 6
பிறந்த நேரம்= 1

பெயரினைக் கணக்கிடும் முறைகளும் மற்றும் விளக்கமும்.
உதராணத்திற்கு..
பெயர் எண்: எ.கா 1:- KALAI ARASU
2+1+3+1+1 1+2+1+3+6
= 8 + 13
= 21
பெயரின் முதல் எழுத்தின் எண் : = 2. பெயரின் கூட்டு எண் :- 3 = (2+1)
ஆகவே இவர் 2 மற்றும் 3 எண்ணால் ஆளப்படுகின்றார். அதவது சந்திரன் மற்றும் குரு கிரகங்களின் மின்காந்த அலைகளைப் பெருவார். மேலும், அக்கிரகங்களின் தன்மைகளே ஏற்படும்.
பெயர் பிரிவதால் இந்த பெயருடைவருக்கு இரண்டு தன்மைகள் வெளிப்படும். அதவது முதல் பெயர் 8 வருவதால் இவர் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடைவர். ஆனால் அந்த வெற்றி இவருக்கு தாமதமாகவே வரும். மேலும், பெரும் போராட்டத்திர்க்கு பிறகே வெற்றி எற்படும். ஆபத்துக்களும் பிரச்சனைகளும் வந்த வண்ணமிருக்கும். இருப்பினும் இவர் 1, 2, 5, 3, 7 என்ற எண்ணுடைவராக இருந்தால் இவருக்கு மேற்கூறிப்பிட தீய தன்மைகள் குறைக்கப்படும். நன்மைகள் விளையும். மேலும், முழுப் பெயரின் கூட்டு எண் 21 ஆக வருவதால் இவர் மூன்றாம் எண்ணால் ஆளப்படுவர். எண் 21 என்பதால் இவர் கொஞ்சம் சுய நலம் கொண்டவராக இருப்பார். மேலும், படிப்படியான முன்னேற்றம் அடைவார். சாமர்த்தியமானவராக இருப்பர். சோதனைக்கு பிறகு தான் வெற்றியும் மகிழ்ச்சியும் அமையும். நிலையான பதவி உண்டாகும்.

எ.கா 2:- GEETHA
3+5+5+4+5+1
= 23
பெயரின் முதல் எழுத்தின் எண் : = 3. பெயரின் கூட்டு எண் :- 5 = (2+3)
ஆகவே இவர் 3 மற்றும் 5 எண்ணால் ஆளப்படுகின்றார். அதவது குரு மற்றும் புதன் கிரகங்களின் மின்காந்த அலைகளைப் பெருவார். மேலும், அக்கிரகங்களின் தன்மைகளே ஏற்படும்.
எண் 23 என்பதால் இவர் போடும் திட்டம் அனைத்தும் எதிர்பின்றி வெற்றி பெரும். மற்றவர்கள் செய்ய முடியாத காரியங்களெல்லாம் இவர் சுலபத்தில் சாதித்து விடுவார். திட்டங்கள் இருந்தால் மட்டும்.. இல்லையென்றால் சுக வாழ்கை தான் அமையும்.

வியாபார நிறுவனத்தின் பெயரினைக் கணக்கிடும் முறை.

சொந்த வியாபாரம் செய்ய விருப்பவார்கள். அவரிகளின் நிறுவனத்தின் (COMPANY) பெயரினை கணக்கிடும் முறை :-

சில உதாரணங்கள்:-
GEETHA’S
3+5+5+4+5+1+3 = 26
KALAI ENTERPRISE
2+1+3+1+1 5+5+4+5+2+8+2+1+3+5 = (8 + 40) = 48
GEETHA TRANSPORT COMPANY
3+5+5+4+5+1 4+2+1+5+3+8+7+2+4 3+7+4+8+1+5+1 = (23+ 38+ 29) = 90
RESTAURANT ARASU
2534162154 + 12136 = (33 + 13) = 46
GEETHA NETWORK SENDIRIAN BERHAD
355451 + 5546722 + 355412115 + 252514 = (23+ 31+ 27+ 19) = 100

ஆகையால் உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய நிறுவனத்தின் (COMPANY) பெயரினில் முதல் எழுத்தும், எழுத்தின் கூட்டு தொகையும் உங்கள் அதிர்ஷ்ட எண்கள் வரும்படி வைத்துக் கொள்ளுங்கள். மேலும், நிறுவனத்தின் பெயரை அமைக்கும் முறையை ” பெயர் அமைக்கும் முறை ” என்ற பகுதியக் காண்க.

வாகனத்தின் எண்ணைக் கணக்கிடும் முறை.

சில உதராணங்கள் :-
AED 7692
= 1+5+4 + 7+6+9+2
= 10 + 6 (24= 2+4=6)
= 16 (1+6= 7)
=7

MAD 2030
= 4+1+4 + 2+0+3+0
= 9 + 5
= 14 (1+4= 5)
=5

WEL 0939
= 6+5+3 + 0+9+3+9
= 14 + 3 (21= 2+1=3)
= 17 (1+7= 8)
= 8

PAN 9650
= 8+1+5 + 9+6+5+0
= 14 + 2 (20= 2+0=2)
= 16 (1+6= 7)
=7

JAC 8721
= 1+1+3 + 8+7+2+1
= 5 + 9 (18= 1+8=9)
= 14 (1+4= 5)
=5

ஆகையால், வாகனம் (மொட்டார் சக்கி அல்லது மொட்டார்வண்டி) வாங்கு போது உங்களின் அதிர்ஷ்டமான எண்ணுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பல முன்னேற்றங்களை காண்பிர்கள். வாழ்த்துக்கள்.
வீட்டின் எண்ணைக் கணக்கிடும் முறை.

உதராணத்திற்கு..

வீட்டின் எண்: 44
என்று வந்தால் 4 + 4 = 8 வருகின்றது. 8 எண் சனி கிரகத்தைக் குறிக்கின்றது.
பொதுவாகவே 8 வருகின்ற எண் நல்ல பலனக் குடுப்பதில்லை. இருப்பினும், 5 எண்காரர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும் சற்று
நன்மை செய்வது போல் தோன்றும். மற்றவர்களுக்கு நன்மைச் செய்ந்தாலும், நன்மைக்கு பிறகு தீன்மைகளும் நடக்க வாய்ப்புகள் உண்டு.
அகையால், இந்த எண்ணை தவிர்ப்பது நல்லது. உங்களை ஆளும் எண்களுக்கு பொருத்தமான அதிர்ஷ்ட எண்களை தேர்வு செய்யுங்கள்.
மேலும், இதுப் போன்ற 8 வருகின்ற எண்ணாகவும் அல்லது உங்களுக்கு அதிர்ஷ்டமில்லாத எண்ணாகவும் உங்கள் வீடு அமைத்திருந்தால் அதை உங்கள்
அதிர்ஷ்ட எண்ணுக்கு மாற்றும் முறைகளை பார்ப்போம்.
உதராணத்திற்கு…

44 என்று வந்தால்.. ஆனால் உங்கள் அதிர்ஷ்ட எண் 1 ஆக இருந்தால். அதை..

4+4=8
8+?=10
? = 2
2 = B,K,R
(4+4+B = 10=1)

44B அல்லது B44 என்று வீட்டு எண்ணை மாற்றி வீட்டைக் குறிக்கும் போது 44B அல்லது B44 என்று குறிப்பிடுங்கள். மேலும், வீட்டின் முன் இருக்கும் எண்ணின் அருகில் B என்று போடுங்கள். அதாவது 44B அல்லது B44 என்று வரும்படி செய்யுங்கள்.

49 என்று வந்தால்.. ஆனால் உங்கள் அதிர்ஷ்ட எண் 5 ஆக இருந்தால். அதை…
4+9 = 4
4+?=5
? = 1
1 = A,J,I,Q,Y

( 4+9+A= 5)
49A அல்லது A49 என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விதியின் ரகசியம்

January1

பெயர் வைக்கும் முறை

முன்னுரை

ஒரு மனிதனின் தலை எழுத்து அல்லது விதி என்று சொல்லக் கூடிய நிச்சயிக்கப் பட்ட ஒன்றை மாற்றக் கூடிய சக்தி மனிதனின் பெயருக்கு உண்டு. பொதுவாகவே, ஒரு குழந்தை பிறக்கும் போது அக்குழந்தைக்கு வைக்கும் பெயர் அந்த குழந்தையின் விதிக்கு எற்பவே அமைந்துவிடும் இது நான் கண்ட உண்மை. இதனால் தான், ஜோதிட சாஸ்திரத்தில் குழந்தை அல்லது ஒருவரைப் பற்றி மிக துள்ளியமாக கூற முடிகின்றது என்றும் நினக்கின்றேன். சில சமயங்களில் சில வீட்டில் பார்தோம் என்றால் தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள் இருப்பார்கள் ஆனால் அதில் ஒரு பிள்ளை அல்லது இரு பிள்ளை மட்டும் அறிவிலும் சரி படிப்பிலும் சரி அவர்கள் செய்யும் செயலிலும் சரி மிக சிறப்பாக விலங்குவார்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரியுமா…? அவர்களின் பெயர்கள் தான். நிறைய பொற்றோர்கள் சொல்வார்கள் என் எல்லாம் பிள்ளைகளுக்கு ஜாதகம் பார்த்துதான் பெயர் வைத்தேன். ஆனால், என் பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டும் மிக திறமை சாலியாக இருக்கின்றார் மற்ற பிள்ளைகயெல்லாம் சாதாரணமாக தான் இருக்கின்றார்கள். இந்த பதில் பெரும் பாலும் எல்லொரிடமுல் இருக்கலாம். இதற்கு என்ன காரணம் இருக்கலாம்? என்று எனக்கும் அதிக நாளாக ஒரு பெரும் கேள்வியாக இருந்தது. மேலும், ஜாதகம் பார்த்து பெயர் வைப்பது சரியா தவரா? என்ற கேள்வியும் வந்தது. ஆய்வுக்கு பிறகு ஓர் உண்மை தெரிய வந்தது. முதலில் ஜாதகம் அல்லது ஜோதிடம் முறையில் பெயர் வைப்பது எதற்கு என்று தமிழர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் அந்த காலத்தில் தமிழர்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது வழக்கம். அதற்காக அங்கு கோவில் குருக்களிடம் அல்லது பூசரியிடம் அர்ச்சனை தட்டைக் கொடுத்தவுடன் அவர் கேட்கும் முதல் கேள்வி ” உங்கள் நட்சத்திரம் என்ன ” என்பது தான். ஆனால் பலருக்கு அவர்களின் நட்சத்திரம் தெரிவதில்லை மேலும் ஞாபக மறதி அல்லது அதை தெரிந்து வைத்துக் கொள்ளும் ஆர்வமும் இல்லை. மேலும், நாம் செய்யும் அர்ச்சனை நமது ராசிக்கும் , நட்சத்திரத்திற்கும் தான் . அந்த நட்சத்திரத்தை நாம் அறிந்து கொள்ளாததால் நம் முன்னோர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்கள் தொடங்கும் விதத்தில் பெயர்கள் வைத்தார்கள். அந்த பெயரை கேட்டவுடன் கோவில் குருக்கள் அல்லது பூசரிகள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் என அறிந்து அந்த நட்சத்திரத்திற்கும் ராசிக்கும் அர்ச்சனை செய்வார். அதற்காக வைக்கப்பட்டதுதான் இந்த ஜாதக முறையில் பெயர்கள். ஆனால் பெருபாலும் இப்பொழுதெல்லாம் நாம் ராசி, நட்சத்திரம், லக்னம் ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆகவே, நாம் ஏன் இன்னும் ஜாதக அடிப்படையில் பெயர்களை வைக்க வேண்டும்..? மேலே கூரியதுப் போல் வீட்டில் ஒரு பிள்ளை மட்டும் திறமைச் சலியாகவும் மற்ற பிள்ளைகயெல்லாம் சற்று மந்தமாகவும் இருபதற்கு காரணம் என்னவெற்றால் ஒரு வேலை நீங்கள் ஜாதக அடிப்படையில் வைத்தப் பெயர் அந்த பிள்ளையின் பிறந்த நாளுக்கு அதிர்ஷ்டமான பெயராக இருப்பதால் தான். மேலும், பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் சிறந்து விலங்குவதற்கும் விலங்கதாதற்கும் அவர்களின் பெயர் தான் காரணம். பொற்றோர்கள் பெருபாலும் பிள்ளைகள் படிப்பிலும் சரி மற்ற விஷயத்திலும் சரி மந்தமாக இருந்தால் அவர்களை திட்டுவது அடிப்பதுமாக இருபார்கள். ஆனால், அவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் உங்கள் பிள்ளைகளின் அந்த நிலைக்கு நீங்கள் தான் காரணம். பிள்ளைகளுக்கு சரியான பெயர் வைத்திருந்தால் அவர்கள் சிறப்பான நிலையில் இருந்திருப்பார்கள். எனவே, பிள்ளைகளை திட்டுவதை நிறுத்தி விடுங்கள் ஆனால் அவர்களை அடியுங்கள் அன்பால் மட்டும். உங்கள் பெயர் அல்லது உங்கள் பிள்ளைகளின் பெயர் நன்றாக அமைந்திருக்கின்றதா என்று பாருங்கள். அப்படி நன்றாக அமைந்தால் நல்லது. அப்படி இல்லை என்றால் என்ன செய்வது? பொதுவாகவே (மலேசியா) பிறப்பு பத்திரத்தில் அல்லது அடையாலே அட்டையில் வைத்த பெயரை மாற்ற முடியாது. ஆனால், பிறப்பு பத்திரத்திலிருந்து அடையாலே அட்டைக்கு மாற்றும் போது பெயரை மாற்ற முடியும் என்கின்றார்கள். அப்படி முடிந்தால் உங்கள் அதிர்ஷ்ட எண்ணுக்கு பெயரினை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி முடியதவர்கள் அல்லது அடையால அட்டையில் அதிர்ஷ்டமில்லாத பெயர் உள்ளவர்களும். என்ன செய்யலாம் என்று பார்த்தால், அவர் தன் பெயரை குறிக்கும் போது அந்த பெயரை அதிர்ஷ்டமான எழுத்துக்களுக்கு மாற்றிய பின் குறிக்க வேண்டும்.

சில உதராணத்திற்கு…
ஒருவரின் பெயர் RAMU -13 என்று வந்துக் கொள்வோம். அதே எழுத்துக்கள் தான் அடையால அட்டையில் இருக்குமெயானால் மேலும் அவருக்கு அந்த பெயர் பல சிக்கல்களை தந்தால்.. அவர் தன் பெயரைக் குறிக்கும் போது RAAMU-14 என்று குறிக்க வேண்டும். இதனால், அவர் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் நிகழும். அதே போலே தான் SELVAM-22 என்ற பெயரும். அதை மாற்றி குறிக்கும் போது SELVAAM-23 என்று மாற்றிக் கொள்ளுங்கள். மேலும், மாற்றிய பெயர் 5 எண்ணாக வரவேண்டும் என்பதற்கில்லை. இது வெறும் எடுத்துக்காட்டு தான், ஆகையால், உங்களில் அதிர்ஷ்ட எண்ணுக்கு உங்கள் குறிக்கும் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்.
பெயர்கள் பொருத்தமாக அமையாவிட்டால் எற்படும் விளைவுகள்:-

எண் கணிதத்தில் கணக்கிடும் முறைகள் என்ற பகுதியை படித்த பின் உங்களின் பிறத்த எண், விதி/கூட்டு எண் மற்றும் பெயர் எண் என்னவெற்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்பொழுது இருக்கும் உங்கள் பெயர் என்ன பலனைத் தந்திருத்தது என்பதை அறிந்திருப்பீர்கள். மேலும், இனி வரும் காலங்களில் அது என்ன என்ன பலன்களை தரவிருக்கின்றது என்பதையும் தெரிந்திருப்பிர்கள். ஆகையால், உங்கள் பிறந்த தேதிக்கும் கூட்டு எண்ணுக்கும் அதிர்ஷ்டமான பெயர் எண்களை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்க.

பெயர் அமைக்கும் போது பார்க்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய எண்கள்:-

சிறப்பான எண்களில் ஒன்று என்று சொல்லக் கூடிய 46 ஆம் எண்ணை
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 9 வருபவர்கள் அவர்களின் பெயர் எண்ணாக வைக்க கூடாது. வைத்தால் அவருக்கு இருதய சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 9 வருபவர்கள் சிறப்பான எண் என்று சொல்லப்படும் 37 ஆம் எண்ணை அவரின் பெயர் எண்ணாக வைக்க கூடாது. வைத்தால் அவர்களுக்கு கண்கள் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
18 ஆம் தேதியில் பிறந்தவர்கள் 44 அல்லது 45 என்று வரக்கூடிய பெயர் எண்ணை வைக்க கூடாது. வைத்தால் குடல் வெடிப்பு, பொறாமை, வயிற்றெரிச்சல், கொடூர சம்பவம், ரத்த முறிவு போன்றவை ஏற்படலாம்.
9 மற்றும் 27 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 9 வருபவர்கள் அவர்களின் பெயரினை 45 என்று வரும்படி வைப்பது சிறப்பு.
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 6 வருபவர்களைத் தவிர மற்றவர்கள் வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அவர்களின் பெயரை 41 என்ற எண்ணுக்கு மாற்றிக் கொண்டால் நோய்லிருந்து விடுப்படலாம்.
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 6 வருபவர்கள் 42 என்ற பெயர் எண்ணை வைத்துக் கொள்ளலாம்.
38 என்ற எண்ணை பெயராக வைத்துக் கொண்டால் திடீர் மரணம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
47 என்ற எண்ணை பெயராக வைத்துக் கொண்டால் கண் குருடாக வாய்ப்புகள் உண்டு.
1 வரக் கூடிய எண்கள் எல்லாம் பொதுவாகவே நல்ல எண்களே ஆனால் 28 பெயர் எண் முன்னேற்றத்தை தரும் பிறகு சரிவைக் கூடத தர வாய்ப்புகள் உண்டு.
2 வரக் கூடிய எண்ணை பெயராக வைத்துக் கொண்டால் கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு குறிப்பாக குடுப்ப சம்பந்தப் பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரும். முடிந்த வரை 20, 29, 38, 47, 110 போன்ற எண்களை தவிர்ப்பது நல்லது. மேலும, 9 ஆம் எண்காரர்களுக்கு அதிக தீங்கினை விளைவிற்கும்.
3 வரக் கூடிய எண்கயெல்லாம் நன்மையே செய்யும். ஆனால், 48, 84 மற்றும் 102 தவிர்ப்பது நல்லது. மேலும், 57 என்ற எண் ஆரப்பத்தில் வெற்றியை தந்தாலும் இறுதியில் அது தன் வெற்றியை நிறுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும். பொதுவாகவே, குரு (3) யாருக்கும் தீங்கினை செய்வதில்லை. மேலும், தனக்கு எதிராக இருக்கும் 6 ஆம் எண்காரர்களுக்கு கூட 3 ஆம் எண் தீன்மைகளை செய்வதில்லை. அதனால், 3 எண்ணைக் கண்டு பயம் கொள்ள வேண்டாம்.
4 வரக் கூடிய எண்கள் பொதுவாகவே எதிர்பாராத எதிர்ப்பை அல்லது விபத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக சொல்லதென்றால் 13, 22, 31 எண்களை சொல்லலாம். 40 என்ற எண் முன்னேற்றத்தை தந்து பிறகு தோல்வியை தரும். மேலும், 1 மற்றும் 8 ஆம் எண்காரர்களுக்கு மட்டும் சற்று நன்மையே செய்யும். மற்ற எண்காரர்கள் இந்த எண்னைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
5 வரக் கூடிய எண்கயெல்லாம் பொதுவாகவே எல்லாம் எண்காரகளுக்கும் நன்மையே தரும். குறிப்பாக 5 , 9 மற்றும் 8 ஆம் எண்காரகளுக்கும் சிறப்பான பலனைத் தரும். அதில் 41 என்ற எண் மிக சிறப்பான பலனை தரும் என்று கூறப்படுகின்றது.
6 வரக் கூடிய எண்களில் 87 மட்டும் தீய எண்ணாக கருதப் படுகின்றது. இருப்பினும் மற்ற எண்கயெல்லாம் நல்ல பலனை குடுக்க கூடிய எண்கள் தான். ஆனால், 3 ஆம் எண்காரர்களுக்கு மட்டும் அதிக தீன்மைகளை விளைவிற்கும். மேலும், 1, 6 மற்றும் 9 ஆம் எண்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
7 வரக் கூடிய எண்கயெல்லாம் பொதுவாகவே தடைகளை ஏற்படுத்தும். ஆனால், 2 ஆம் எண்காரர்களுக்கு மட்டும் நன்மையே அதிகம் விளைவிற்கும். குறிப்பாக 16, 43. 61, 106, 115 போன்ற எண்கள் நன்மை தருவதாக இருந்தாலும் சில சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக 9 ஆம் எண்காரர்களுக்கு அதிக தீங்கினை விளைவிற்கும்.
8 வரக் கூடிய எண்கயெல்லாம் பொதுவாகவே நம் வேலைகளை தாமதம் படுத்தும். மேலும், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒருவேலை அதிர்ஷ்டத்தை தந்தால் அது தவரான பாதையில் செல்வதைக் குறிக்கின்றது. அதே நேரத்தில் தோல்வியைத் தந்தால் அது ஒழுக்கமான பாதையில் செல்வதைக் குறிக்கும். இருப்பினும் 5 ஆம் எண்காரர்களுக்கும் மட்டும் நன்மைகளே செய்யும்.
9 வரக் கூடிய எண்களில் 18 என்ற எண் பல சிக்கல்களை விளைவிற்கும் என்று கூறப் படுகின்றது. மேலும், 99 என்ற எண்ணும் தீன்மையே அதிகம் உண்டுப் பண்ணும் என்று சொல்லப்படுகின்றது. மற்றப்படி 3, 5, 6 மற்றும் 9 ஆம் எண்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். ஆனால், 2 மற்றும் 7 ஆம் எண்காரர்களுக்கு அதிக தீங்கினை விளைவிற்கும்.

பெயர் வைக்கும் போது பெயர் 2 எண்ணிலோ , 8 எண்ணிலோ வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இருப்பினும் பெயர் ஆரம்பத்தில் வரும் எழுத்தில் 2 எண்ணுடைய B,K,R என்ற எழுத்துக்கள் வரலாம். மேலும், 8 ஆம் எண்ணுடைய F, P ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக 5 ஆம் எண்காரர்களைத் தவிர மற்றவர்கள் வைத்துக் கொண்டால் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால், 1 மற்றும் 4 ஆம் எண்காரர்களுக்கு மட்டும் கொஞ்சம் நன்மைத் தரலாம். அதேபோல் 4, 7 ஆகிய எண்களில் பெயர் வைப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், ஒருவருக்கு சரியாக பெயர் அமையாமல் நோயில் சீக்கியவர்கள் அல்லது மேலே குறிப்பிட்ட விளைவுகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உங்கள் பெயர்களை உங்கள் அதிர்ஷட எண்ணுக்கு அல்லது நோய் குணப்படுத்தும் பெயர் எண்ணுக்கு மாற்றி அந்த பெயரை ஒரு நாளிக்கு 32 முறைகள் எழுத வேண்டும். எழுதும் போது ஒவ்வொரு எழுத்தையும் தனிதனியாக தள்ளி தள்ளி எழுத வேண்டும். பெரிய ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டும்.
மேலும், எழுதும் போது ஒவ்வொரு எழுத்தாக மனதில் உறக்க சொல்லிக் கொள்ள வேண்டும். தினமும் எழுதிக் கொண்டு வர வேண்டும். உங்கள் குறிக்கோள் (நோய் குணமாகும் வரை/ பிரச்சனைகள் தீர்வுகாணும் வரை)
நிறைவேறும் வரை எழுதிக் கொண்டிருங்கள். எ.கா:- RAMU என்ற பெயரை மாற்றிய பிறகு RAAMU என்று குறிப்பிடும் போது அவர் அதை R A A M U என்று எழுதி வர வேண்டும்.
இப்பொழுது தேதி மற்றும் கூட்டு எண்ணுக்கு அதிர்ஷ்டமான பெயர் அமைக்கும் முறைகளை பார்ப்போம்.
பெயர்களை அமைக்கும் போது பிறந்த தேதிக்கும் கூட்டு எண்ணுக்கும் ராசியான பெயர் எண்களை தேர்வு செய்க.
பிறந்த எண்களுக்கு சாதகமான முதல் எழுத்துகளும் கூட்டு பெயர் எண்களும்
தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான கூட்டு பெயர் எண்கள்
1&1

A,I,J,Q,Y @ D,M,T @ B,K,R @ F,P

1,2,4
2&1

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z@ D,M,T @ F,P

1,2,4,7
3&1

C,G,L,S @ A,I,J,Q,Y @ D,M,T @ B,K,R @ F,P

1,2,3,4,9
4&1

A,I,J,Q,Y @ D,M,T @ B,K,R @ F,P

1,2,4
5&1

A,I,J,Q,Y @ D,M,T@ E,H,N,X @ B,K,R @ F,P

1,2,4,5,9
6&1

A,I,J,Q,Y @ D,M,T @ B,K,R @ U,V,W @ F,P

1,2,4,6,9
7&1

A,I,J,Q,Y @ D,M,T @ B,K,R @ U,V,W @ F,P

1,2,4,5
8&1

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X @ B,K,R @ U,V,W @ F,P

1,2,4,5
9&1

A,I,J,Q,Y @ E,H,N,X @ D,M,T @ C,G,L,S @ U,V,W @ F,P @ K

1,3,4,5,6,9

தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான கூட்டு பெயர் எண்கள்
1&2

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ D,M,T @ F,P

1,2,3,4,7
2&2

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ C,G,L,S

1,2,3,5,7
3&2

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ C,G,L,S

1,2,3,7
4&2

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ C,G,L,S @ F,P

1,2,3,7
5&2

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ E,H,N,X @ C,G,L,S

1,2,3,5,7
6&2

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ U,V,W

1,2,6,7
7&2

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ C,G,L,S @ U,V,W

1,2,3,5,7
8&2

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ C,G,L,S @ D,M,T

1,2,3,5,7
9&2

A,I,J,Q,Y @ C,G,L,S @ U,V,W @ O,Z @ B,K,R

1,2,3,5,6,7,9

தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான கூட்டு பெயர் எண்கள்
1&3

C,G,L,S @ A,I,J,Q,Y @ D,M,T @ F,P

1,2,3,4,9
2&3

C,G,L,S @ A,I,J,Q,Y @ B,K,R @ O,Z

1,2,3,7
3&3

C,G,L,S @ A,I,J,Q,Y @ B,K,R

1,2,3,9
4&3

C,G,L,S @ A,I,J,Q,Y @ B,K,R @ D,M,T @ F,P

1,2,3,9
5&3

C,G,L,S @ A,I,J,Q,Y @ E,H,N,X @ B,K,R @ F,P

1,2,3,5,9
6&3

A,I,J,Q,Y @ B,K,R @ U,V,W @ C,G,L,S

1,2,9
7&3

C,G,L,S @ A,I,J,Q,Y @ B,K,R @ U,V,W

1,2,3,5,9
8&3

C,G,L,S @ A,I,J,Q,Y @ D,M,T @ B,K,R

1,2,3,4,5,9
9&3

C,G,L,S @ A,I,J,Q,Y @ E,H,N,X

1,3,5,9

தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான கூட்டு பெயர் எண்கள்
1&4

A,I,J,Q,Y @ D,M,T @ B,K,R @ F,P

1,2,4
2&4

A,I,J,Q,Y @ B,K,R @ O,Z @ F,P

1,2,3
3&4

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ F,P

1,2,3
4&4

A,I,J,Q,Y @ D,M,T @ U,V,W @ C,G,L,S @ F,P

1,3,4,6
5&4

A,I,J,Q,Y T @ E,H,N,X @ F,P

1,5,9
6&4

A,I,J,Q,Y @ U,V,W @ F,P

1,6,9
7&4

A,I,J,Q,Y @ B,K,R @ E,H,N,X @ U,V,W @ F,P

1,2,5,6
8&4

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X

1,4,5
9&4

A,I,J,Q,Y @ C,G,L,S @ E,H,N,X @ U,V,W @ F,P

1,3,5,6,9

தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான கூட்டு பெயர் எண்கள்
1&5

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X @ O,Z @ F,P

1,2,4,5,7,9
2&5

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ E,H,N,X @ O,Z @ F,P

1,2,3,5,7,9
3&5

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ E,H,N,X @ O,Z @ F,P

1,2,3,5,7,9
4&5

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X @ O,Z @ F,P

1,2,4,5,7,9
5&5

E,H,N,X @ O,Z @ F,P

5,7,8,9
6&5

A,I,J,Q,Y @ E,H,N,X @ U,V,W @ O,Z @ F,P

1,5,6,7,9
7&5

B,K,R @ E,H,N,X @ U,V,W @ O,Z @ F,P

2,5,7
8&5

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X @ O,Z @ F,P

1,4,5,7,9
9&5

C,G,L,S @ E,H,N,X @ U,V,W @ F,P @ K

3,5,6,9

தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான கூட்டு பெயர் எண்கள்
1&6

A,I,J,Q,Y @ B,K,R @ D,M,T @ U,V,W @ F,P

1,2,4,6,9
2&6

A,I,J,Q,Y @ B,K,R @ U,V,W @ O,Z

1,2,6,7
3&6

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ U,V,W

1,2,9
4&6

A,I,J,Q,Y @ D,M,T @ U,V,W @ F,P

1,4,6,9
5&6

A,I,J,Q,Y @ E,H,N,X @ U,V,W @ O,Z @ F,P

1,5,6,9
6&6

A,I,J,Q,Y @ U,V,W @ O,Z

1,6,9
7&6

A,I,J,Q,Y @ E,H,N,X @ U,V,W @ O,Z @ F,P

1,2,5,6
8&6

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X @ U,V,W

1,4,6,9
9&6

A,I,J,Q,Y @ E,H,N,X @ U,V,W

1,5,6,9

தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான பெயர் எண்கள்
1&7

A,I,J,Q,Y @ B,K,R @ D,M,T @ E,H,N,X @ F,P

1,2,4,5
2&7

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ E,H,N,X @ O,Z @ F,P

1,2,3,5,7
3&7

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ E,H,N,X

1,2,3,5
4&7

A,I,J,Q,Y @ B,K,R @ D,M,T @ E,H,N,X @ F,P

1,2,5
5&7

B,K,R @ E,H,N,X @ O,Z @ F,P

2,4,5,7
6&7

A,I,J,Q,Y @ B,K,R @ E,H,N,X @ U,V,W

1,2,5,6
7&7

B,K,R @ C,G,L,S @ E,H,N,X @ U,V,W

2,5
8&7

A,I,J,Q,Y @ B,K,R @ D,M,T @ E,H,N,X

1,2,4,5
9&7

C,G,L,S @ E,H,N,X @ U,V,W @ B,K,R

2,3,5,6

தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான பெயர் எண்கள்
1&8

A,I,J,Q,Y @ B,K,R @ D,M,T @ E,H,N,X

1,2,4,5
2&8

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ E,H,N,X @ O,Z

1,2,3,4,5,7
3&8

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ D,M,T @ E,H,N,X

1,2,3,4,5,9
4&8

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X

1,4,5
5&8

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X @ O,Z @ F,P

1,4,5,7
6&8

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X @ U,V,W

1,5,4,6,9
7&8

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X

1,2,4,5
8&8

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X

1,4,5
9&8

A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X @ U,V,W

1,3,4,5,6

தேதி எண் & கூட்டு எண்

சாதகமான முதல் எழுத்துகள்

சாதகமான பெயர் எண்கள்
1&9

A,I,J,Q,Y @ B,K,R @ C,G,L,S @ E,H,N,X @ U,V,W @ F,P

1,3,4,5,6,9
2&9

A,I,J,Q,Y @ C,G,L,S @ E,H,N,X @ U,V,W @ O,Z @ B,K,R

1,3,5,6,9
3&9

A,I,J,Q,Y @ C,G,L,S @ E,H,N,X

1,3,5,9
4&9

A,I,J,Q,Y @ C,G,L,S @ D,M,T @ E,H,N,X @ F,P

1,3,4,5,6,9
5&9

C,G,L,S @ E,H,N,X @ U,V,W

3,5,6,9
6&9

A,I,J,Q,Y @ E,H,N,X @ U,V,W

1,5,6,9
7&9

C,G,L,S @ E,H,N,X @ U,V,W @ B,K,R

3,5,6
8&9

A,I,J,Q,Y @ C,G,L,S @ D,M,T @ E,H,N,X @ U,V,W

1,3,4,5,6,9
9&9

C,G,L,S @ E,H,N,X @ U,V,W

3,5,6,9

“எதிரான எழுத்தும் பெயர் எண்ணும் அமைந்தால்” என்ற பகுதியை காண்க.

மேலே குறிப்பிட்ட பிறந்த எண்களுக்கு சாதகமான முதல் எழுத்துகளும் கூட்டு பெயர் எண்களும் சற்று மேலோட்டமாக சொல்லப் பட்டவை தான்.
அதனால் மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துக்களையும் கூட்டு பெயர் எண்களையும் தொடர்ந்துப் பார்ப்போம்.

பெயர் அமைக்கும் போது முதல் எழுத்தை பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டமானதாக தேர்வு செய்க. பிறகு பெயரின் கூட்டு எண்ணைப் பிறந்த நாளின் கூட்டு எண்ணுக்கு அதிர்ஷ்டமானத் தேர்வு செய்க. அப்படி செய்வது சிறப்பாக இருக்கும்.

பிறந்த எண்களுக்கு மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகளும் கூட்டு பெயர் எண்களும்
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 1 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க…
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = A,I,J,Q,Y @ D,M,T
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 1 4
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 2 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க…
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = O,Z @ B,K,R @ A,I,J,Q,Y @ C,G,L,S @ E,H,N,X
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 7,2,1,3,5
குறிப்பு ;- இவர்கள் 9 எண் வரக்கூடிய பெயர்களின் கூட்டு எண்களைத் தவிர்த்து கொள்வது நல்லது.
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 3 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க…
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = C,G,L,S
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 3,9
குறிப்பு ;- இவர்கள் 6 எண் வரக்கூடிய பெயர்களின் கூட்டு எண்கள் மற்றும் முதல் எழுத்தாக U,V,W போன்ற எழுத்துக்கள் வருவதைத் தவிர்த்து கொள்வது நல்லது.
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 4 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க…
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = A,I,J,Q,Y
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 1
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 5 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க…
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = E,H,N,X
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 5,9
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 6 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க..
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = U,V,W @ A,I,J,Q,Y @ S
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 6,1,9
குறிப்பு ;- இவர்கள் 3 எண் வரக்கூடிய பெயர்களின் கூட்டு எண்கலையும் மற்றும் முதல் எழுத்தாக C,G,L போன்ற எழுத்துக்கள் வருவதைத் தவிர்த்து கொள்வது நல்லது.
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 7 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க..
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = B,K,R @ E,H,N,X @ U,V,W
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 2,5,6
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 8 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க..
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = A,I,J,Q,Y @ D,M,T @ E,H,N,X
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 1,4,5
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 9 இருக்கின்றவர்கள் அவர்களின் பெயரை மற்ற அல்லது வைக்க..
மிக அதிர்ஷ்டமான முதல் எழுத்துகள் = C,G,L,S @ E,H,N,X @ U,V,W
மிக அதிர்ஷ்டமான கூட்டு பெயர் எண்கள் = 3,5,6
குறிப்பு ;- இவர்கள் 2 மற்றும் 7 ஆகிய எண் வரக்கூடிய பெயர்களின் கூட்டு எண்களையும் மற்றும் முதல் எழுத்தாக B,K,R,O,Z போன்ற எழுத்துக்கள் வருவதைத் தவிர்த்து கொள்வது நல்லது.

குறிப்பு ;- 5 எண்காரர்களைத் தவிர மற்றவர்கள் 8 எண் வரக்கூடிய பெயர்களின் கூட்டு எண்கள் தவிர்த்து கொள்வது நல்லது.

மேலே கொடுக்கப்பட்ட விஷயத்தைக் கொண்டு பெயரினை அமைத்துக் கொள்வது சிறப்பு. ஆனால் கிழே இருப்பது போல் பிறந்த எண்ணும் கூட்டு எண்ணும் அமைதால் நான் முத்தியே குறிப்பிட்ட பிறந்த எண்களுக்கு சாதகமான முதல் எழுத்துகளும் கூட்டு பெயர் எண்களும் என்ற பகுதியே பார்த்து பெயர் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
3&6
6&3
2&9
9&2
எ.கா:- 3 தேதி கூட்டு எண் 6 (3&6) என்று வந்தால் அவர்கள் 1 எண்ணில் வரும் எழுத்துகளான A, I, J, Q, Y ஆகிய எழுத்துக்களில் ஒன்றை முதல் எழுதாக அமைத்துக் கொள்வது சிறப்பு. மேலும், கூட்டு பெயர் எண்ணை 1 அல்லது 9 வரும் எண்களில் அமைத்துக் கொள்வது சிறப்பு.

மேலும், பெயர் அமைக்கும் போது பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம்.
முதல் பெயரில் அருகில் இருக்கும் எழுத்தை. அதாவது பெயரின் இரண்டாம் எழுத்து. அது எப்படி என்றால்
முதல் எழுத்தின் எண்ணுக்கும் இரண்டாம் எழுத்தின் எண்ணுக்கும் பொருத்தம் இருக்க வேண்டும். முதல் எழுத்துக்கு சாதகமான எழுத்து இரண்டவது எழுத்தாக வருவது சிறப்பு. எ.கா:- MARAN அல்லது MAARAN என்ற பெயரை பாருங்கள் முதல் எழுத்தின் எண் 4 இரண்டாம் எழுத்தின் எண் 1. முன்பு கூறியது போல் 4 எண்ணுக்கும் 1 எண்ணுக்கும் பொருத்தம் இருப்பதால் அந்த பெயர் அவர்க்கு அதிர்ஷ்டத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

எதிரான எழுத்தும் பெயர் எண்ணும் அமைந்தால்
அதாவது 9 எண்காரர்களுக்கு எதிரான B,K,R (2) மற்றும் O,Z (7) என்ற எண்களின் எழுத்துக்களை முதல் எழுத்தாகவும் பெயரின் கூட்டு எண்ணாகவும் 9 ஆம் எண்காரர்கள் வைத்துக் கொண்டாலும் அல்லது 2 மற்றும் 7 ஆம் எண்காரர்கள் 9 என்று வரக் கூடிய பெயரின் கூட்டு எண்ணாக வைத்துக் கொண்டாலும் சரி அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும். அதேப் போலே தான் 3 ஆம் எண்காரர்கள் 6 என்று வரக் கூடிய எழுத்துக்களையும் பெயரின் கூட்டு எண்ணாகவும் 6 எண்காரர்கள் 3 என்று வரக் கூடிய எழுத்துக்களையும் பெயரின் கூட்டு எண்ணாகவும் அமைத்துக் கொண்டால் முன்னேற்றம் உண்டு. ஆனால் சிறு வயதில் சில சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரும் அப்படி இல்லை என்றால் வாழ்வில் ஏதோ ஒரு குறைப்பாடு இருந்துக் கொண்டே இருக்கும். இருப்பினும், அது அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
முக்கிய குறிப்பு -
S மற்றும் K என்ற எழுத்துக்களைப் பற்றி இங்குச் சொல்ல வேண்டும். S என்ற எழுத்து 3 ஆம் எண்காரர்களுக்கும் 6 ஆம் எண்காரர்களுக்கும் பொதுவானது. இருவருக்கும் நன்மையே விளைவிற்கும். ஆனால் 6 ஆம் எண்காரர்களுக்கு முன்னேற்றத்தை தந்தலும் ஒரு குறைப் பாடு இருந்த வண்ணமிருக்கும். ஆனால் அது வெற்றிக்குத் தடையாக இருக்காது. அப்படி இருக்குமெயானால் அதற்கு பெயரின் கூட்டு எண் தான் காரணமாக இருக்கும். மற்றப் படி 1,2,9 ஆகிய எண்காரர்களுக்கும் S என்ற எழுத்து சாதகமாக அமையும். அதே போன்றுதான் K என்ற எழுத்தும் 9 ஆம் எண்காரர்களுக்கும் எதிரான எழுத்தாக இருந்தாலும் பிறந்த எண் 9 உடையவர்கள் K என்று ஆரம்பிக்கு எழுத்தை வைத்துக் கொண்டால் சில சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் சூழ் நிலை உருவாகும். சில பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டியதாக இருக்கும். ஆனால் அது அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த தடங்களும் ஏற்படுத்தாது. இருப்பினும் அவர்களின் பெயரின் கூட்டு எண் அவர்களுக்கு அல்லது பெயரின் முதல் எழுத்துக்கு சாதகமாக அமைந்து விட்டால் சிக்கல்கள் குறையும் வெற்றி நிச்சயம்.
மேலும் இதைத் தவிர்த்து பெயரின் கூட்டு எண் அவரின் பிறந்த எண்ணுக்கு எதிராக இருந்தால் அதாவது உதாரணத்திற்கு 2 ஆம் எண்காரர்கள் 9 வரக் கூடிய கூட்டு எண்ணை பெயரில் கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால், கவனமாக இல்லை என்றால் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் சந்தரப்பம் ஏற்படும். அதே போன்று தான் 3,6,7,9 ஆகிய எண்காரர்களுக்கும். இதை ஆரந்தோமெயானால், 2,3,6,7,9 போன்ற எண்காரர்கள் அவர்களுக்க்கு எதிரான எழுத்தை பெயரின் ஆரம்ப எழுத்தாகவும் அல்லது பெயரின் கூட்டெண்ணாகவும் கொண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு அதே நேரத்தில் ஒரு குறைப்படு நிச்சயம் இருந்தக் கொண்டே இருக்கும். ஆனால் முன்பு சொன்னதுப் போல் பெயரின் முதல் எழுத்து பெயரின் கூட்டு எண்ணுக்கும் அதிர்ஷ்டமாக இருத்தால் உடல் ரிதியாகவும் அல்லது மன ரிதியாகவும் குறைபடு இருந்தால் கூட நாளாக நாளாக அது மறைந்து பிறகு சிறப்பான வாழ்க்கை அமையும். அதேப் போல தான் 6 ஆம் எண்காரர்கள் 3 எண் வரக் கூடிய எழுத்தான C,G,L,S போன்ற எழுத்துக்களை முதல் எழுத்தாக வைத்துக் கொண்டால் சில சோதனைக்கு பிறகு வெற்றி வரும். மேலும், பெயரின் ஆரம்ப எழுத்துக்கும் பெயரின் கூட்டு எண்ணுக்கும் அல்லது பெயரின் கூட்டு எண் அவரின் பிறந்த எண்க்கு அதிர்ஷ்டமாக இருப்பதும் அவசியம். உதாரணத்திற்கு.. 7&6 என்ற பிறந்த எண் வரக்கு கூடியவர் அவரின் பெயரை GUNA = 15, SIVA = 11, LOGANAATHAN =36, SEETHA = 23, SUNTHAR RAJ = 30, SRI = 6 மற்றும் இது போன்று வருவதாக இருந்தால் நல்லது. ஒரு முக்கிய குறிப்பு கூட்டு எண் 6 உள்ளவர்களுக்கு S என்ற எழுத்து முன்னேற்றத்தை தந்தாலும் “பெயர் நன்றாக அமையவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள்” என்ற பகுதியில் சொன்னதுப் போல் ஏதாவது ஒன்று நடக்க வாய்ப்புகள் உண்டு. அதே போலேதான் மற்ற எண்காரர்களுக்கும்.

மிக அதிர்ஷ்டக்காரமான பெயர் அமையே..

பெயர் வைக்கும் போதுத் தவிர்த்துக் கொள்ள வேண்டிய கூட்டு பெயர் எண்கள் 2,4,7,8 போன்ற எண்கள்
(எ.கா: 2,11,20,29,38,47…../4,13,22,31,40…/7,16,34,43,52,…/8,17,26,44,53…) ஆனால்.. 25 மற்றும் 35 சற்று நன்மையானவை. இதில் மற்ற எண்கள் நன்மைத் தந்தாலும் எதாவது ஒரு குறைப்பாடு இருந்துக் கொண்டே இருக்கும்…

1,5,6,9 (எ.கா: 1,10,19,37,46…/5,14,23,32,41…/6,15,24,33,42…/9,27,36,45…) போன்ற எண்களில் வரும் கூட்டு பெயர் எண்கள் அனைத்தும் நன்மையானவை ஆனால் 28,18 போன்ற எண்களில் வரும் கூட்டு பெயர் எண்கள் நன்மையை விட தின்மையே அதிகம் விளைவிற்கும். இதில் மற்ற எண்கள் எல்லாம் நன்மையே செய்யும்.

3 (எ.கா: 3,12,21,30,48,57….) எண்களில் வரும் எண்கள் எல்லாம் நன்மையானவை தான், ஆனால், அந்த எண்ணில் பெயர் கொண்டுள்ளவர்களை விட அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு தான் அதிகம் நன்மை விளைவிற்கும். எனவே, இவ்வெண்ணைக் கூட்டு பெயராக கொண்டவர்கள் செய்யும் செயல்கள் அல்லது விஷயங்கள் யாவும் மற்றவர்களுக்கு தான் அதிக நன்மைத் ஏற்படும். மேலும், இவர் மற்றவர்களுக்காக வாழும் நிலை ஏற்படும். ஆனால், இவ்வெண்கள் தீங்கினை விளைவிற்காது!! இருந்தும் இவ்வெண்ணை தவிர்த்துக் கொள்வது சிறப்பு.

மேல் குறிப்பிட்ட 1,5,6,9 என்ற எண்களில் வரும் கூட்டு பெயர் எண்கள் யாவும் எல்லாருக்கும் பொருந்தும் (ஏற்றது) என்று கூறிட முடியாது! எனவே, அவர் அவருக்கு அதிர்ஷ்டம் தரும் எண்களைக் கொண்டு பெயர் அமைப்பது சிறப்பு. தொடர்ந்து.. பிறந்த எண்ணும் அவர்களுக்கு அதிர்ஷ்டமான எண்களையும் பார்ப்போம்..
பிறந்த தேதி – அதிர்ஷ்டக் கூட்டு பெயர் எண்கள்
1 – 1,62 – 1,5
3 – 1,5,9
4 – 1,
5 – 5,9
6 – 1,6,9
7 – 5,6
8 – 1,5
9 – 5,9,6
10 – 1,6
11 – 1,6
12 – 1,5,9
13 – 1,5
14 – 5,9,1
15 – 1,6,5,9
16 – 5,6,1
17 – 1,5
18 – 5,9,6,1
19 – 1,6,5
20 – 1,5
21 – 1,5
22 – 1,5
23 – 5,9,1
24 – 1,6,5
25 – 5,6
26 – 1,5
27 – 5,9,6
28 – 1,5,6
29 – 1,5,6
30 – 1,5,6
31 – 1,5,9

அல்லது

கூட்டு எண் – அதிர்ஷ்டக் கூட்டு பெயர் எண்கள்
1 – 1,6
2 – 1,5
3 – 1,5,9
4 – 1
5 – 5,9
6 – 1,6,9
7 – 5,6
8 – 1,5
9 – 5,9,6

உங்களது பிறந்த தேதி:9

March20

உங்களது பிறந்த எண் 9 – செவ்வாய் (Mars)

எண் ஒன்பதுக்கான பலன்கள்:

இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள்.
இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு. உடலும் சற்று முறுக்கேறி நிற்கும். நான்கு எண்காரர்களைப் போல் இவர்களுக்குக் கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் நிறைந்திருக்கும். எனவே இவர்களுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எத்தொழிலிலும், பதவியிலும், நிர்வாகத்திலும் வல்லவர்கள். இவர்கள் ஓரளவு ஒல்லியானவர்களே! ஆண்களில் பெரும்பாலோர் மீசை வளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள். நாவன்மை மிகுந்தவர்கள்.

இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் மென்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும், துரதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த எண்காரர்களுக்கு உடலில் அடிக்கடி காயங்கள், விபத்துக்கள் போன்றவை ஏற்படும். ஆயினும் அதைக் கண்டு பயப்பட மாட்டார்கள்.

9-ம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8&ம் எண்ணில் மட்டும் இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும், வாகனங்களால் விபத்து உண்டு.

இந்தச் செவ்வாய்க் கிரக ஆதிக்கர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் லாரி, காளை மாண்டு வண்டிகள், குஸ்தி, நீச்சல் போட்டிகள், மிருகவேட்டை, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். சர்க்கஸ் விளையாட்டுக்களில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். கார், சைக்கிள், லாரி, பஸ் ஆகியவற்றை மிகவும் வேகமாக ஓட்டுபவர்கள் இவர்கள் தான். இவர்கள் எதற்கும், எப்போதும் பயப்பட மாட்டார்கள்! மேலும் தங்களது நோக்கத்திற்காகக் கடுமையான உழைக்கவும் தயங்க மாட்டார்கள்.
இவர்கள் எப்போதும் அலைபாயும் மனத்தை உடையவர்களாக இருப்பார்கள். இறைவன் இவர்களின் மனத்தை அமைதியாக வைத்திருக்க அனுமதிப்பதில்லை போலும்!
இவர்கள் நடப்பதில் மிகவும் பிரியமுடையவர்கள்! இவர்களுக்கு என்னதான் வசதியிருப்பினும் கால் தேய நடந்து செல்வதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும், தனியார் ஸ்தாபனங்களிலும் தலைமைப் பதவியில் இவர்கள் நன்கு புகழ் பெறுவார்கள். இவர்கள் உழைப்பதில் சுகம் காண்பார்கள். சோம்பலை இவர்கள் வெறுப்பவர்கள். ஊர் சுற்றுவதிலும் அலாதிப் பிரியம் உடையவர்கள்.

நடுரோட்டில் ஒரு நோஞ்சானை ரௌடி ஒருவன் தாக்கினால் அதைக் கண்டு பொறுக்காமல், அந்த முரடனுடன் தைரியமாகச் சென்று போராடுபவர்கள் இவர்கள்தான். சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்ளது மன உறுதியினாலும், விடா முயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறி விடுவார்கள்.

இவர்கள் சுதந்திரப் போக்கு உடையவர்கள்! அவசரக்காரர்கள்! உணர்ச்சி மயமானவர்கள்! பிடிவாத குணம் இயற்கையிலேயே உண்டு. ஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கி விடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் சண்டைக் குணத்தால், குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும். தங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு.

எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள் கிடைத்தால்தான், இவர்கள் அவற்றில் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்து முடிப்பார்கள். இல்லை என்றால் அவைகளை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். பின்பு அந்தக் காரியங்கள் கெட்டழிந்தாலும்கூட அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.

இவர்களது திருமணம்:

இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (உடல் எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.

2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும். சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

நண்பர்கள்:

3, 6, 9 ஆகிய எண்களை உடைய அன்பர்கள் இவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் அமைவார்கள். 1ந்தேதி பிறந்தவர்களின் உதவி நடுத்தரமானதுதான். 2, 8 எண்காரர்களின் நட்பையும், கூட்டையும் தவிர்த்துவிட்டால், பல நஷ்டங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம்.

நோய்கள்:

இவர்களது உடலில் ஏதாவது ஒரு நீண்டகாலப் பிணி இருக்கும். அடிக்கடி வாய்வுத் தொந்தரவுகள், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இவர்களுக்குப் பல் வலி, பற்களில் பூச்சி விழுதல் போன்றவை ஏற்படும். கால் ஆணித் தொந்தரவுகள், பாதங்களில் வலி, வெடிப்புக்கள் ஆகியவை ஏற்படும். மிகவும் உஷ்ண தேகிகளாதலால், இவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கலும், மூல உபத்திரவங்களும், வலியும், கண்களில் எரிச்சலும் ஏற்படும். பகலைவிட இரவில் உற்சாகமாக இருப்பார்கள். நீண்ட நேரம் இரவில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டோ, பேசிக் கொண்டோ இருப்பார்கள். இவர்கள் தினமும் நீராகாரம் பருகி வந்தால் மிகவும் நல்லது! உடல் சூட்டைத் தணிக்க நீராகாரம் சிறந்த பானமாகும்.

நெருப்புக் காயங்கள், விபத்துக்கள் ஆகியவைகளால் உடலில் பாதிப்பும் உண்டு. இரத்தக் கட்டிகள், குடற்புண்கள், இரத்தம் கெடுதல் ஆகியவைகளால் பாதிப்பும் உண்டு! கூர்மையான ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொள்ளக்கூடாது! இந்த எண்காரர்களின் உடம்பில் எப்படியும் ஆபரேஷன்கள் (ஏதாவது ஒரு காரணத்திற்காவது) செய்ய வேண்டி வரும்.
இவர்களது தொழில்கள்

இவர்களில் பெரும்பாலோர் எஞ்சினியர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பார்கள். இராணுவம், போலீஸ், மேனேஜர் போன்ற அதிகாரப் பதவிகளின் விருப்பம் உடையவர்கள். மேலும் கட்டிடம் கட்டுதல், இயந்திரங்கள், வியாபாரம், இரும்புச் சாமான்கள் உற்பத்தி ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும். சிறந்த அமைச்சர்களாகவும், இராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வான இயல் துறையும், இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

நாட்டிற்காகத் துப்பாக்கி ஏந்து வீரர்கள் இவர்களதான். அநீதிகளை எதிர்த்துப் போராடுவார்கள். இவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம். பலரை வைத்து வேலை வாங்கும் தலைவர்களாக, உயர் அதிகாரியாக, மேஸ்திரியாகப் புகழ் பெறுவார்கள். இவர்கள் வீரம் மிகுந்தவர்கள், துப்பறியும் தொழில் ஒத்து வரும். கலைத் தொண்டிலும், உணர்ச்சியைத் தூண்டும் எழுத்திலும் பிரகாசிப்பார்கள்! பொது மக்களுக்காகத் தியாகம் (உண்மையாகச்) செய்ய வல்லவர்கள். பிரபல வேட்டைக்£கரர்களாகவும், வனவிலங்குகளைத் திறமையாக அடக்கும் தொழிலும் சிவீக்ஷீநீus நன்கு பிரகாசிப்பார்கள். கால் பந்தாட்டம், டென்னிஸ், ஹாக்கி, பேட்மிண்டன், வாலிபால், சைக்கிள் பந்தயம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வார்கள்! சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் புகழ் பெறுவார்கள்.

இரயில், கார், லாரி ஆகியவை ஓட்டுநர்கள், தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றிலும் இவர்கள் தொழில் அமையும்.

எண் 9 சிறப்புப் பலன்கள்:

எண்களில் முடிவானது இந்த எண்தான். எந்த எண்ணுடன் சேர்ந்தாலும், தன் இயல்புக் குணத்தை இழக்காதது இந்த எண்தான். 3 எண்ணுடன் 9 சேர்ந்தால் 12 கிடைக்கும்.
மீண்டும் கூட்டினால் (1+2) 3 என்ற எண்ணே மீண்டும் கிடைக்கும்.

எனவே 9 எண்காரர்கள் மற்ற எண்காரர்களுடன் சேர்ந்து செயல்பட்டுத் தங்களின் இயல்பிறக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றிவிடும் திறமை படைத்தவர்கள்!

இவர்கள் தீவிரமான மனப்போக்கும், தைரியமான செயல்பாடும் கொண்டவர்கள். எந்த முயற்சியையும் திட்டமிட்டு, அதன்படியே செயல்படுவார்கள். எத்துணைச் சோதனைகள் வந்தாலும், அவைகளைத் துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவார்கள்! மற்றவர்கள் இவர்களை அலட்சியம் செய்தால் உடனே தட்டிக் கேட்பார்கள். மனதில் எப்போதும் தைரியம், தன்னம்பிக்கை உண்டு. தவறுகளைக் கண்டால் உடனே தட்டிக் கேட்கவும் தயங்கமாட்டார்கள்.

எதையும் திட்டமிட்டு, நேரம், காலம் பார்த்துத் தங்களது காரியங்க¬ளை நடத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டும். இவர்களது பேச்சில் எப்போதும் வேகமும், அதிகாரமும் உண்டு! பயம் என்பது இருக்காது! செவ்வாய்க் கிரகம், தேவர்களுக்குத் தளபதியாவார். எனவே இவர்களுக்கச் சண்டையிடும் மனோபாவம் இயற்கையிலேயே அமைந்துவிடும். இரத்தம், விபத்து, கொலை போன்ற சம்பவங்களிலும் எல்லாம் துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வார்கள். வேகம், சக்தி, அழிவு, போர் என்பவற்றின் எண் இது! ஆற்றல், ஆசை, தலைமை தாங்குதல் ஆதிக்கம் செலுத்தல் போன்ற குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள். விரைவிலேயே ஒரு முடிவு எடுத்து அதை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவார்கள். பலருக்கு உடலில் காயங்களும், சிறு விபத்துக்களும் ஏற்படும். பெரும்பாலோர் போர் வீரர்கள், காவல் துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற கடினமான துறைகளிலும் புகழ்பெற்று விளங்குவார்கள்.

இவர்கள் நிதானம் குறைந்தவர்கள்! உணர்ச்சி வசப்பட்டவர்கள், பிறருக்கு அடங்கி நடக்க முடியாதவர்கள். பகைவர்களை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். பல சமயங்களில் இவர்களது பேச்சே இவர்களுக்குப் பல சண்டைகளைக் கொண்டு வந்துவிடும். பங்காளிச் சண்டை, மனைவி குடும்பத்தாருடன் ண்டை என்று அடிக்கடி பிரச்சினைக்குள்ளாவார்கள்! பிறர் தங்களைக் குறை கூறவதை மட்டும் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது!
சந்தர்ப்பங்களைச் சமாளிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக ஆற்றலும் உண்டு! அதிகாரத்துடன் மற்ற அனைவரையும் வேலை வாங்குவார்கள். இல்லையெனில் மனம் உடைந்து போவார்கள்.

இவர்கள் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவார்கள். பலர் வெளிநாடுகளுக்கும் சென்று வருவார்கள். இவர்கள் ஆன்மீகத் தலைவர்களைக் கண்டவுடன் பணிந்து மிகவும் மதிப்பு கொடுப்பார்கள். பலருக்கு முன்னோர்கள் தேடி வைத்த செல்வங்கள் இருக்கும். இவர்களுக்கு மனைவியின் வழி சொத்துக்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியமும் உண்டு. இவர்கள் கூர்மையான அறிவுடையவர்கள். எதிரிகளைச் சமயம் அறிந்து அவர்களை அழித்துவிடும் இயல்பினர். தீவிரமான ஆராய்ச்சிகளில் பலர் ஈடுபடுவார்கள். இவ்வளவு இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பார்கள். தெய்வம் உண்டு என்பதை முழுமையாக நம்புவார்கள்.
தங்களது தொழிலில் மிகவும் உற்சாக உள்ளவர்கள்! தங்களது தொழிலை பெருகச் செய்வது எப்படி என்பதைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பார்கள். பலருக்கு அரசாங்கப் பணியிலும், காவல் துறையிலும், இராணுவத்திலும் மிகவும் ஈடுபாடு உண்டு.

அதிர்ஷ்ட நாட்கள் – Lucky Dates:

ஒவ்வொரு மாதமும் 9, 18, 27 ஆகிய நாட்களும், 6, 15, 24 ஆகிய நாட்களும் மிகவும் சிறப்பானவை! எனவே கூட்டு எண்கள் 6 மற்றும் 9 வரும் நாட்களும் இவர்களுக்கு மிகவும் சாதனமானவையே.

1, 10, 19, 28 மற்றும் எண் 1 வரும் நாட்களும் நடுத்தரமான பலன்களையே கொடுக்கும்.

ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 நாட்களும் கூட்டு எண் 2 வரும் நாட்களும் துருதிர்ஷ்டமானவை! எந்தச் செயலும் தொடங்கக் கூடாது.

அதிர்ஷ்ட இரத்தினம் – Lucky Gems:

இவர்களுக்குப் பவழம் (CORAL) மிகவும் ஏற்றது! இரத்தக் கல் (BLOOD STONE) மிகவும் ஏற்றது! மேலும GARNET எனப்படும் இரத்தினக் கல்லும் மிகவும் நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – Lucky Colours:

இவர்களுக்கு கருஞ்சிவப்பு, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் மிகவும் ஏற்றவை! ஆனால் கரும்பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் துரதிர்ணடமானவை.

9-ஆம் தேதி பிறந்தவர்கள்:

வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுபவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். சுதந்திரமான எண்ணங்கள் நிறைந்தவர். புதிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உடையவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள விரும்புவார்கள்! உற்றார், உறவினர்களிடம் கூட அடிக்கடி சண்டை போடு குணமும் உண்டு.

18-ஆம் தேதி பிறந்தவர்கள் :

போராட்டமே இவர்களது வாழ்க்கையாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் எச்சாக்கையைப் பொருட்படுத்தமாட்டார்கள். எதையும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவே முற்படுவார்கள். பேச்சுத் திறமை அதிகம் உண்டு. கட்டைப் பஞ்சாய்த்து செய்து வைக்கும் குணத்தவர்கள்.
அவசரம், பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டால், இவர்கள் பெரும் சாதனைகளைப் படைக்கலாம். காதலிலும் அதிகாரம் காட்டி, அதன் மூலம் பிரச்சினைகளை உண்டு பண்ணிக் கொள்வார்கள். எப்போதும் உணர்சி வசப்பட்டவர்கள், மன அமைதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

27-ஆம் தேதி பிறந்தவர்கள்:

அறிவும், ஆற்றலும் நிறைந்தவர்கள். பலர் இராஜ தந்திரிகளாகவும் விளங்குவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு நிச்சியம் கிடைக்கும். இரவு நேரத்தில் வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்கும். இவர்களது திட்டங்கள் எல்லாம் நிச்சயம் வெற்றி அடையும். மனம் தளராமல் உழைப்பவர்கள். மற்ற இரு தேதிகளில் பிறந்த அன்பர்களை விட அமைதியானவர்கள். செயலில் நம்பிக்கை உடையவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

நல்ல செயல்களின் மூலம் பேரும், புகழும் அடைவார்கள். சுதந்திர மனப்பான்மை உண்டு. நிதானமாக, அவசரப் படாமல் (சீரான திட்டத்துடன்) செயல்பட்டு வெற்றியைச் சீக்கிரம் அடைவார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்தே காரியங்களில் ஈடுபடுவார்கள்.

எண் 9க்கான (செவ்வாய்) தொழில்கள்:

இவர்கள் நிர்வாகச் சக்தி மிகுந்தவர்க! ஆயுதம் தாங்கிச் செய்யும் அனைத்துத் தொழிலும் வெற்றி பெறுவார்கள். இராணுவம், காவல் துறை, அறுவை மருத்துவர்கள் (ஷிuக்ஷீரீமீக்ஷீஹ்) போன்றவைகளில் பிரகாசிப்பார்கள். கார், ரயில், விமானம், ஓட்டுவதில் நாட்டம் உள்ளவர்கள். வேகமாகச் செல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பொறுமை இவர்களுக்குப் பிடிக்காத விஷயம்.

எலக்ட்ரிகல் என்ஜினியரிங் துறை, விவசாயத்துறையும் ஒத்து வரும். தீயுடனும், வெப்பத்துடனும் சேர்ந்த எந்தத் திட்டங்களிலும் வெற்றி பெறுவார்கள். எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் பிரகாசிப்பார்கள். சிலர் கோபக்காரர்களாக மாறி தீய செயல்களைச் செய்யவும் தயங்கவும் மாட்டார்கள்.

பொறியியல் தொடர்பான பெரிய பொறுப்புகளை தைரியமாக ஏற்று வெற்றி பெறுவார்கள். இரும்பு, எஃகு தொழில்களில் ஈடுபட்டால் சீக்கிரம் முன்னேறலாம். அச்சகத் தொழிலும் நன்கு அமையும்.

கட்டிடத் துறை, மின்சாரத் துறை, விளையாட்டுத் துறை, வாழை, மொச்சை, சிவப்பு தானியம் போன்றவை உற்பத்தி, உரம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தச்சு வேலை, ஸிமீணீறீ ணிstணீtமீ போன்ற தொழில்கள் அனைத்தும் வெற்றி தரும். ழிவீரீலீt கீணீtநீலீனீணீஸீகள் விளையாட்டு வீரர்கள். மலையேறும் வல்லுநர்கள் போன்றவையும் வெற்றி தரும்.

ஆன்மிகத்திலும் சிலர் தீவிரமாக, முழுமையான மனதுடன் ஈடுபடுவார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களையும் தொடங்கி, நன்கு நிர்வகிப்பார்கள்.

குறிப்பு:

இதுவரையிலும் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களுக்கான தொழில்களைப் பார்த்தோம். உங்களது பிறவி எண்ணுக்கோ, விதி எண்ணுக்கோ, பொருத்தமான தொழிலாக இருக்க வேண்டியது முக்கியம். பெயர் எண்ணிக்கான தொழிலிலும் ஓரளவு வெற்றி பெறலாம்.

எனது அனுபவத்தில் எண்கணிதப்படியான தொழில்களே இறுதியில் மனிதனுக்கு அமைகின்றன. நீங்கள் கோடீஸ்வரராவது என்பது சரியான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்தான் உள்ளது என்பதால் மிகந்த கவனம் தேவை!

எனவே ஒன்றுக்கு பல தடவை சிந்தித்து உங்களது தொழிலையோ, வியாபாரத்தையோ தொடங்குகள்! முடிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலிலும் ஈடுபடுங்கள்! தொழிலில் உங்களை நம்பி முழுமையாக ஈடுபட்டால், அதில் வெற்றி பெறலாம். கோடிகளைக் குவிக்கலாம்.

 

ஒன்பதாம் எண்ணுக்கு உகந்தவை:

 

 

நன்மை தரும் முதல் எழுத்து : C,G,L,S,U,V,W,A,J,Q,Y
நன்மை தரும் தேதி : 1,3,6,9,10,12,15,18,19,21,24,27,30
நன்மை தரும் கிழமை : வியாழன், ஞாயிறு, செவ்வாய்
நன்மை தரும் நிறம் : சிவப்பு, மஞ்சள்
நன்மை தரும் திசை : தெற்கு, வடகிழக்கு
நன்மை தரும் தொழில் : நெருப்பு சம்பந்தமானவை, இரும்பு, ஓட்டல்,
விவசாயம், கமிஷன், கடல் கடந்த வியாபாரம்,
பூஜை பொருட்கள், கார் விற்பனை,
ரியல் எஸ்டேட், காவல், ராணுவம், மருத்துவம்

 

 

உங்களது பிறந்த தேதி:8

March20

 

 

 

 

 

 

Sunday, 12 August 2012

உங்களது பிறந்த தேதி:8

 

 

உங்களது பிறந்த எண் 8 – சனி (saturn) 

 

எண் எட்டுக்கான பலன்கள்:

மனிதர்கள் எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள். “சுவையாக இருக்கிறது” என்று அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு, அதன் பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு சரியில்லை, சர்க்கரை நிலை உடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில் அதிகம்! அரிய நெல்லிக்கனியானது சாப்பிடும்போது கசக்கும். ஆனால் சாப்பிட்ட பின்பு மிகவும் இனிக்கும். மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இந்தக் கனி மிகவும் சிறந்தது! இருப்பினும் நெல்லிக்கனியைச் சாப்பிடும்போது கசப்பு என்ற காரணத்திற்காகப் பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை!

அது மட்டுமன்று மனிதன் மற்ற எல்லாவற்றையும்விடத் தன் நாக்கிற்கே அடிமையாக இருக்கிறான்! நினைத்துப் பாருங்கள்! தொண்டைக்குக் கீழ் எந்த உணவுப் பொருள்கள், பானங்கள் சென்றாலும் ஒன்றுதான். நாக்கிற்கு கீழே சென்றுவிட்டால், எந்தப் பொருளுக்கும் எந்தச் சுவையும் இல்லை! இருப்பினும் மக்கள் தங்களின் உடல்நலம் பாராது நாக்கின் சுவைக்காகவே ருசியாகச் செய்து சாப்பிடுகிறார்கள். மக்களின் இரசனைதான் என்னே?

அதைப் போன்றே மற்ற 8 எண்களும், மனிதனை தூண்டிவிட்டு அவனை இகலோக … வாழ்க்கையில் சுகங்களில் ஆழ்த்தி விடுகிறது! மனிதனும் தனக்கு யோகம் வந்துவிட்டது என்று மகிழ்கிறான்! ஆனால் சனிபகவான் ஒருவர்தன் மற்ற கிரகங்களின் தன்மையைக் கவர்ந்து ஒருவன் மற்ற ஜென்மம் வரை தொடர்ந்து செய்த வினைகளை ஆராய்ந்து, அவனது செயல்களுக்கு ஏற்ப முதலில் தீய பலன்களையும், பின்பு நல்ல பலன்களையும் தவறாமல் கொடுத்துவிடுகிறார்! மற்ற நவக்கிரகங்களைப் போல், சனீசுவரரை ப்ரீதி செய்து, எளிதில் இவரது தண்டனையிலிருந்து தப்ப முடியாது!

8&ஆம் எண்ணில் பிறக்கும்போதே, மனிதன் விதியில் வசப்படுகிறான், 8&ம் எண் பிறவி எண்ணாக வரும் போது. வாழ்க்கையில் கடும் போராட்டத்தையும், உடலில் அல்லது மனத்தில் ஏதாவது சிறிய நோயையும் கொடுத்து விடுகிறத. ஆனால் விதி எண்ணாக வரும்போது, அவனது முயற்சிகளையும், ஊக்கத்தையும் தனது காலத்தில் (30 வயதுக்கு மேல்) கொடுத்து அவனைத் தடுமாற வைத்து விடுகிறது! அவனது சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் அனைவரிடமும் கெட்ட பெயர் அல்லது அவமானம் அடைய நேரிடுகிறது! பின்பு அவனை தன்வழியே போராடும் குணத்தை 8 எண் வாரி வழங்குகிறது! புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், புதிய ஊர் என்று ஒரு புதிய அற்புத வழியைத் திறந்து விடுகிறது! எனவே மக்களும், தங்களது கடுமையான உழைப்பால் வாழ்க்கையின் உச்சியை 45 வயதுக்கு மேல் எப்படியும் அடைந்து விடுகிறார்கள். இதுவே அனுபவ உண்மை ஆகும்.

பள்ளியில் தனது போதனையாலும் தேவைப்பட்டால் தண்டனையாலும் ஒரு மாணவனைச் சீர்திருத்தும் ஆசிரிய¬ப் போன்றவரே சனீசுவரராவார். எனவே 8ம் எண் விரும்பத் தக்கதேயன்றி வெறுக்கத்தக்கதன்று!

சில அன்பர்கள் கோடீசுவரர்கள் குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். இவர்கள் என்னதான் வசதி மிகுந்த நிலையில் வாழ்ந்திடினும், வண்டுகள் துளைத்த மாங்கனியைப் போல் உள்ளக் குடைச்சல்கள் நிறைந்தவர்கள்! மனத்தில் ஏதாவது ஒரு சோகத்தையும், வியாதியையும் வைத்துக் கொண்டு, மனதில் நிம்மதியில்லையே என்று அலைவார்கள். “பாசமாவது ஒன்றாவது. அது வீதயில்தான் கிடைக்கிறது” என்று புலம்புவார்கள்.
ஏதாவது ஒரு பெரிய குறை அல்லது குறைபாடு மனதை அரித்துக்கொண்டே இருக்கும். குழந்தையில்லை, மனைவியால் இன்பமில்லை. நண்பனால் சுகமில்லை என்று எதையாவது நினைத்துத் தங்களை வருத்திக் கொள்வார்கள்.

வாழ்க்கையினை வெறுத்து முதியோர் இல்லம், ஆன்மீக மடங்கள், அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் இருப்பவரும், அதனை ஆரம்பிப்பவரும் 8ஆம் எண்காரர்களேயாகும்.1856
“எட்டாவது பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவர்” என்பது பழமொழி. மக்களும் 8, 17, 26 ஆகிய தேதிகளைக் கண்டுதான் பயப்படுகிறார்கள். எந்த ஒரு நற்காரியத்தையும் தவிர்த்து விடுகிறார்கள்.8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், &ம் எண்ணை விதி எண்ணாக உடையவர்களும் 9&ம் எண்ணில் தங்களது பெயரை உடையவர்களும், தங்களது வாழ்வில் பல தோல்விகளையும், வேதனைகளையும், சில அவமானங்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதே 8&எண் கூறும் வாழ்க்கை நியதி!

8-ஆம் எண்ணில் பிறந்த அதிர்ஷ்டசாலிகள் (சனி வலிமை நல்ல நிலையிலிருந்தாலும்) பெருத்த தனவான்களாகவும், பல்வேறு தொழில்களை உடையவர்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள்! தியாகிகளாகவும், அருளாளர்களாகவும், சிறந்த நீதிபதியாகவும், பேராசிரியர்களாகவும், அமைச்சர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும், கோடீஸ்வரார்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் 8&ஆம் எண்ணில் பிறந்த மற்றவர்கள் தங்களது பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியாமல் வாழ்க்கை முழுதும் தவிக்கின்றவர்களே. பெரும்பாலும் கொலை, களவு, கொள்ளை, கடத்தல், பொய்க் கையெழுத்து, விபச்சாரம், குடி, சூது, விரசம், நம்பிக்கைத் துரோகம் போன்ற பல்வகை சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார்கள்.

ஆனால் மேற்கொள்ள துர்ப்பலன்களைக் கண்டு வாசகர்களே பயப்படவேண்டாம்! 8 ம் எண்காரர்களும் அதிர்ஷ்டம் மிகுந்த வாழ்க்கை வாழ வேண்டுமெனில் தங்களது பெயரினை மிகவும் ஆராய்ந்து, நல்ல பெயர் ஒலியிலும், பெயர் எண்ணிலும் வைத்துக் கொண்டால், தங்களது கெட்ட விதியினைக்கூட மாற்றிவிட முடியும்! பல அன்பர்கள் பெயரை சீர்படுத்தி பலனடைந்துள்ளார்கள்.

எனவே கவலைப்படவேண்டாம். அது மட்டுமன்று பிரபல சினிமா நட்சத்திரங்களும், பெருத்த வியாபாரிகளும், மிராசுதார்களும், அதிகாரிகளும், கோடீசுவரர்களும் 8&ம் எண்ணில்தான் பிறந்துள்ளனர். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், ஈ.வெ.ரா பெரியார், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஜே.ஆர்.டி. டாட்டா போன்றோரெல்லாம் இந்த எண்ணில் பிறந்து, வெற்றிகரமாக வாழந்தவர்கள்தான்.

தெய்வ நம்பிக்கை இவர்களிடம் தீவிரமாகவே உண்டு! ஒன்று கடவுளே இல்லை! என்று வாதிடுவார்கள். அல்லது கடவுளே கதி! என்று இறைவனை நம்புவார்கள்.
தங்கள் நல்லதென்று நினைத்து, எடுத்துச் செய்கின்ற காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல் செய்து முடிக்கும் வலிமை இவர்களுக்கு உண்டு. ஓரளவு பிடிவாத குணம் நிறைந்தவர்கள். இவர்கள் மேற்பார்வைக்குக் கடின மனமும் பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரித்து வாழ்க்கையளிக்கத் தயங்க மாட்டார்கள். பலாப்பழம் போன்ற குணமடையவர்கள்.

பொது சேவைக்கான முயற்சிகள், எடுத்துக் கொண்டிருப்£ர்கள். தங்களது வாழ்க்கையிலும், எப்போதும் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். தங்களின் வசதிகளையும், பதவிகளையும், உறவினர்களையும் திடீரென ஒருநாள் ஒதுக்கிவிட்டு, மக்கள் சேவைக்கென ஓடிச் செல்பவர்கள் இவர்கள்தான்.

தனிமனித வாழ்ககையானாலும், சமுதா வாழ்க்கையானாலும் எட்டாம் எண்ணின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டால், பெரிய சோதனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் என்றே எண்கணிதம் சொல்கிறது!

சாகதத்திலும், எந்த ஒரு கிரகமும் 8ம் இடத்தில்(இராசிக் சக்கரம்) இருந்தாலும் (சனியைத் தவிர) அல்து கோசாரத்தில் 8&ம் இடத்திற்கு வந்தாலும், அந்தச் சாதகர்கள், அந்தக் கிரகத்தின் காரணத்தால் பல துன்பங்களை நிச்சயம் அடைவார்கள் என்று சோதிட சாத்திரம் கூறுகிறது!

8&ம் எண்காரர்கள் பெரும் தத்துவ ஞானிகளாகவும், மனிதர்களுக்கு வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் விளங்குகிறார்கள்.

தொழில்:

இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான அனைத்து தொழில்களும் வெற்றி தரும். 8ம் எண் வலிமை பெற்றால் பொறியாளர்களாகவும், 8&ம் எண்ணன் வலிமை குறைந்தால் டிப்ளமோ மற்றும் லேத் தொழில்கள் போன்ற வேலைகளில் ஈடுபடும் சாதாரணத் தொழிலாளிகளாகவும் இருப்பார்கள்.

லாரி, பஸ் போன்ற (சனியின் காரகத்துவ) தொழில் இவர்களுக்குப் பெருத்த அதிர்ஷ்டத்தைத் தரும். மில்கள் எண்ணெய் மில்கள், இரும்பு வியாபாரம் ஆகியவையும் நன்மை தரும். எண்ணெய் வியாபாரமும் நல்லது.

ஆன்மீக மடாதிபதிகள், கோவில் தர்மகர்த்தா, ஊர்மணியகாரர் போன்றவர்ளாகவும் புகழ் பெறுவார்கள்.

மேலும் நிலம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்கு யோகத்தைத் தரும். விவசாயம், கட்டிங்கள் கட்டுதல், லே&அவுட் போடுதல் இவர்களுக்கு ஒத்து வரும். பெரிய நிலக்கிழார்களும், பெரும் விவசாயிகளும் இவர்கள்தாம்.
உலகத்தை மறந்து உழைப்பதால் இவர்கள் ஆராய்ச்சித் தொழில்களில் (Research and Development) பல வெற்றிகள் பெறுவார்கள். பூகோளம், மற்றும் (Geology) நில ஆராய்ச்சிகளில் இவர்களது வாழ்க்கை அமையும். 8&ம் எண்காரர்கள் மிகப் பெரிய பேச்சாளர்களாகவும், மதப்பிரசங்கிகளாகவும் விளங்குவார்கள். சுரங்கப் பொருட்கள் எடுத்தல், சுரங்கப் பொருள்கள் வியாபாரம் செய்தல் வெற்றி தரும். கிரனைட் கற்கள், கடப்பாக்கற்கள் வியாபாரம் போன்றவை வெற்றி தரும்.

கம்பளித் துணிகள், ஆயுதங்கள், சோப்புக்கள், வியாபாரம் மற்றும் உற்பத்தித் தொழில்கள் நல்ல இலாபத்தைத் தரும். இவர்கள் அச்சகம் (Press), சோதிடம், வைத்தியம் ஆகிய தொழில்களிலும் வெற்றியடையலாம். சிறைத் துறையும் (Jail Department) இவர்களுக்கு ஒத்தவரும்.

திருமண வாழ்க்கை:

இவர்களது திருமண வாழ்வு பெருமையாகச் சொல்லப்படவில்லை! திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும். தங்களது மனைவியுடன் கூட திறந்த மனதுடன் பழக மாட்டார்கள். சிலர் தனது மனைவிகளை அலட்சியத்துடன் நடத்துவார்கள். மனைவி எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவார்கள். இதேபோல் 8-ம் தேதி பிறந்த மங்கையரும், தங்கள் கணவருடன் அன்பின்றியே நடந்து கொள்வார்கள். தன் மனம்போல் வாழ நினைப்பார்கள். இங்ஙனம் உண்மையான அன்பின்றியே பெரும்பலானா எட்டாம் எண் நபர்கள் வாழ்கின்றார்கள்.

இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8&ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.

நண்பர்கள்:

1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களே இவர்களுக்குச் சிறந்த நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 8ம் தேதி பிறந்தவர்களாலும் இவர்கள் நன்மையடையலாம். 6, 5 தேதியில் பிறந்தவர்களாலும் நன்மை அடையலாம்!

இவர்களது நோய்கள்:

இவர்கள் பிறந்த தேதிகள். குடல் பலகீனம் உடையவர்கள். சிறு வயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு! தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.

இரத்தத்தில் விஷச்சேர்க்கை எளிதில் ஏற்பட்டுவிடும். எனவே அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது! வாதம் மூட்டுப் பிடிப்புகளால் பாதிப்புகள் அதிகம் உண்டு. ஈரல் அடிக்கடி பாதிக்கப்படும்.

காபி, டீ, மது போன்றவற்றில் நிதானம் தேவை. உணவில் எலுமிச்சம் பழம், அன்னாசி, வாழை, சிஸ்மிஸ் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரை மிகவும் நல்லது!

சனி மந்திரம்:

நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நவாமி சநைச்சரம்

எண் 8. சிறப்புப் பலன்கள்:

மக்கள் அனைவரும் பயப்படும் 8ம் எண்ணின் சிறப்பு பலன் களைப் பற்றிப் பார்ப்போம்.
மக்களின் வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் ஆதாரமாக விளங்குவது இந்த 8ம் எண்ணே! ஆனால் மக்கள் இந்த எண்ணை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இந்த எண் விதியின் எண்ணாக இருப்பதால், நாம் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளை அனுசரித்து நல்ல பலன்களையோ அல்லது தீயபலன்களையோ கொடுக்கிறது!
இவர்கள் எடுத்துக் கொள்ளும் எந்த செயலானாலும் அவற்றில் எதிர்ப்பும், முட்டுக்கட்டையும் உண்டு. ஆனால் எதிர்ப்பையும், தடைகளையும் பொருட்படுத்தாமல் காரியங்களில் ஈடுபடுவார்கள். வெற்றி பெறுவார்கள்.

இவர்கள் தங்களைப் போல் மற்ற பாதிக்கப்பட்ட மக்களிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள். மனதில் இரக்க குணம் இருக்கும். இவர்களில் பெரும்பாலோர் பெரிய சாதனைகளை, கடின உழைப்புடன் செய்து முடிப்பார்கள்.

இது விதியின் எண்ணாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் வெற்றியோ அல்லது தோல்வியோ தொடர்ந்து வந்த கொண்டே இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது கடமைகளை இவர்கள் தீவிர முனைப்புடன் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களுக்கு உண்மையான நன்மை செய்வார்கள்.

8-ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு பெரும்பாலும் கிடைக்காது. இதனால் வெளியூர், அடுத்த இன மக்கள், வெளிநாடு என அந்நியர்களிடமிருந்தே இவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்கள் வந்தால், பின்பு தொடர்ந்து யோகம் வரப் போகிறது என்று பொருள். இதற்குக் காரணம் 8 என்பது இரண்டு பூஜ்யங்களால் உருவாக்கப்பட்டது. 0+0=8. எனவே, முயற்சிகள் எல்லாம் பயன் அடைவதும், பூஜ்யமாவதும் அவர்களது விதிப்படியே அமைகிறது. விதி என்றவுடன் பயப்பட வேண்டாம். இன்று நாம் செய்யும் நல்ல செயல்கள், நாளை நல்ல விதியாக அமைகின்றன! அலட்சியத்துடன் புரியும் தீய செயல்கள், நாளை நிச்சயம் கெட்ட விதியாக மாறி விடுகின்றன! எனவேதான் புறநானூறு கூறுகிறது.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனவே, நேர்மையான வழியில் உழைத்தால் வெற்றி மேல் வெற்றி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆரம்ப காலம் முதலே மக்கள் 8&ம் எண்ணை விதியின் எண் என்று பயந்து வந்துள்ளார்கள். இது தனி மனிதன் வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும் பொருந்தும். இந்த எண்ணின் ஒரு பக்கம் கடுமையான உழைப்பு, கருணை, ஏற்றம், பெருத்த இராஜ யோகம் உண்டு. மறுபக்கம் புரட்சி, எழுச்சி, அராஜகம், ஒழுங்கின்மை போன்றவையும் உண்டு!

எல்லாம் விதிப்படியேதான் நடக்கிறது என்று இவர்கள் புலம்புவார்கள். பல நேரங்களில் வாழ்வில் விரக்தியும் ஏற்படும். இருப்பினும் தங்களது வாழ்நாளிற்குள், இவர்கள் பெருத்த யோகத்தை அனுபவித்தே செல்வார்கள். மனம் விரக்தியடையும் போது தற்கொலை எண்ணங்கள் கூடச் சிலருக்குத் தோன்றும்.

இவர்கள் சிறந்த நீதிமான்கள், தெய்வத்திற்குப் பயந்தவர்கள். 8ம் எண்ணானது ஒரு மனிதனைப் புடம் போட்டு, அவனைத் தங்கமாக்கி விடும். இவர்களின் வாழ்க்கையில் எல்லா முக்யி நிகழ்ச்சிகளும் 8ம் எண் வரும் நாட்களிலேயே நடைபெறும்! கிரேக்கர்கள் இந்த எண்ணை “நீதியின் கண்” என்று அழைத்தனர்.

தாங்கள் எண்ணியதைக் கடைசிவரை நிறைவேற்ற வேண்டும் என்ற தீவிர எண்ணம் உடையவர்கள். தாங்கள் நினைத்ததை அப்படியே வெளியில் சொல்ல மாட்டார்கள். தங்கள் வாழ்வின் பிற்பகுதியில்தான் பெரும்பாலோர் இன்பத்தை அனுபவிக்கின்றனர். இவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவு. எனவே, அதை அவசியம் வளர்த்துக் கொள்ளவேண்டும். தங்களை உலகத்தில் தனிமையாக இருப்பதாக உணர்வார்கள். எனவே எளிதில் அடுத்தவர்களை நம்ப மாட்டார்கள்.

இவர்களுக்குப் பெயர் எண் நன்றாக இருந்தால் மட்டுமே, கெட்ட விதியினை மாற்றிக் கொள்ள முடியும். அதில் கவன குறைவாகவோ, அலட்சியமாகவோ நடந்து கொள்ளும்போது, துன்பங்கள் தொடர்ந்து வரும்.

பிறர் படும் துன்பம் கண்டு சகிக்காத மனம் கொண்டவர்கள். தங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும், உதவிகிட்டும் இடத்தையாவது காட்டுவார்கள்.

8-ம் எண்ணின் ஆதிக்கம் குறைந்தோர் திருட்டு, வழிப்பறி, கொலை, விபச்சாரம் போன்ற வழிகளில் துணிந்து ஈடுபடுவார்கள். அதனால் நிச்சயம் தண்டனையும் (சிறை) அடைவார்கள்.
எந்தச் செயலையும் சற்று மெதுவாகவே செய்வார்கள். தரையைப் பார்த்தே நடப்பார்கள்.

எந்த ஒரு பிரச்சினைக்கும், நடுவராக இருந்து நீதி சொல்லச் சிறந்தவர்கள். தம்மிடம் நட்புக் கொண்டவர்களையும், பகைமை கொண்டவர்களையும், தமது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். உடல் உழைப்பில் இவர்களுக்கு நாட்டம் அதிகம். பெரும்பாலும் தனிமையாக இருப்பதையே விரும்புவார்கள். இவர்களது பேச்சில் விதி, வாழ்க்கை, தர்மம் என்று அடிக்கடி வார்த்தைகள் வரும். இவர்களுக்குக் காதல் விவகாரங்கள் வெற்றி கொடுக்காது. திருமணமும் பொதுவாக அன்னியத்தில் (அடுத்த ஜாதி, மதம், அந்நியநாடு) தான் நடக்கும். இவர்களது செல்வ நிலை ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும். எந்த முன்னேற்றம் வந்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் பல சோதனைகள் கூடவே வந்துவிடும்.

சுதந்திரமான தொழிலைக் காட்டிலும், அடுத்தவர்களின் கீழ் வேலை செய்வதையே விரும்புவார்கள். ஆனால் 8&ம் எண் வலிமை பெற்றவர்கள். பெரும் தொழில் அதிபர்களாகவும், கடல் கடந்து தொழில் செய்யும் வல்லுநர்களாகவும் இருப்பார்கள்! உடம்பிலோ அல்லது மனத்திலோ ஏதாவது ஒரு குறை அல்லது நோய் இருந்து கொண்டே இருக்கும்.

அதிர்ஷ்ட நாள் – Lucky Dates:

இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய நாட்கள் மிகச் சிறந்தவை. 8&ம் எண்ணின் தீய குணங்களை 5ம் எண் மட்டுமே போக்கும் வல்லமை படைத்தது. எனவே, 5, 14, 23 ஆகிய நாட்களும் இவர்களுக்கு நன்மையே புரியும். எனவே கூட்டு எண் 1 மற்றும் 5 வரும் நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை.
4, 13, 22, 31 நாட்களில் நல்லவை தாமாகவே நடக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் இவர்கள் அந்த நாட்களில் தேடிச் செல்லக்கூடாது! 9&ம் எண்ணும் நல்ல பலன்களையே செய்யும்.
ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய நாட்களும், 2, 11, 20, 29 நாட்களும் கெட்ட பலன்களையே கொடுக்கும். கூட்டு எண் 8 மற்றும் 2 வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட இரத்தினம் – Lucky Gems:

இவர்களுக்கு நீலம் (Blue Sapphire) என்னும் இரத்தினக் கல்லே மிகவும் அதிர்ஷ்டமானது! ளிறிகிலி (மரக்கல்) என்ற இரத்தினக் கல்லையும் உபயோகிக்கலாம். மேலும லெபராடோரிட் (LABRADORIATE) லாஜர்த் (LAPIS LAZULLI) என்னும் கற்களையும் உபயோகப்படுத்தலாம்.

அதிர்ஷ் நிறங்கள் – Lucky Colours:

இவர்களுக்கு மஞ்சள் நிறமே சிறந்தது. ஆழ்ந்த பச்சை, நீலம் ஆகியவை நன்மை தரும். மற்றவர்களை சந்திக்கச் செல்லும்பபோது எப்போதும் நீலநிறம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகள் சிறந்தவை.

கருப்பு, பாக்குக்கலர் மற்றும் கரும்சிவப்பு ஆகிய நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.

8-ஆம் தேதி பிறந்தவர்கள் :

இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அமைதியான வாழ்க்கை உண்டு. மதப்பற்று அதிகம் உண்டு. இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள்.

சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள்.

17-ஆம் தேதி பிறந்தவர்கள்:

இவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்திப்பவர்கள். சலிக்காமல் உழைக்கும் இயல்பினர். எப்படியும் இறுதியில் பெருமைமிகு வாழ்க்கையை அடைவார்கள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு. ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம் சேர்ப்பதில் சமர்த்தர். துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும் அடையும். இருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றிக்கு மாற்றும் சாதுர்யம் உண்டு. இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். தங்களுக்கு வரும் தடைகளையும், சோதனைகளையும் துவம்சம் செய்யும் துணிவு படைத்தவர்கள்.

26-ஆம் தேதி பிறந்தவர்கள் :

பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி/ தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான். பிறரால் அடிக்கடி வீண்பழி சுமத்தப்படுவார்கள். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள்.

இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும். இவர்கள் மக்கள் அனைவரையும் எந்த வித்தியாசமின்றிச் சமமாக நேசிப்பார்கள் காதல் விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்படும்.

எண் 8க்கான் (Saturn) தொழில்கள்:

இவர்கள் கடின உழைப்பாளிகள். சனி ஆதிக்கம் குறைந்தவர்கள் கூலியாகவும், Technician களாகவும் இருப்பார்கள்.

கடலை, எள்ளு, கம்பு, மலை வாழை, புகையிலை, மூங்கில், கீரை வகைகள், மரம், விறகு, கரி, எண்ணெய் வியாபாரம், உதிரி பாகங்கள்(Spares) விற்பனையும் நன்கு அமையும். ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில்கள், பட்டிட வேலை மேஸ்திரி, தபால் துறை, துப்பறியும் துறை (Detective) துப்புரவுத் துறை (Sanitary)யிலும் நன்கு பிரகாசிக்கலாம். அச்சுத் தொழில், பைண்டிங் போன்றவையும் நன்கு அமையும்.
பலர் பொறுமைசாலிகள், ஆராய்ச்சியாளர்கள், கணிதம் பூகோளம், நில ஆராய்ச்சி (Mining), தத்துவம், பௌதிகம் (Chemsitry), இரும்புத் தொழில்கள் போன்றவையும் நன்கு அமையும். பிராணிகள் வளர்ப்பு, வைத்திய தொழிலம் பார்க்கலாம். விவசாய முதலாளிகளும் (Landlord), தொழிலாளிகளும் (Labourers) இவர்களே. பலர் பெரிய தொழிலதிபதிகளாகவும் வெற்றி பெறுவார்கள்.

போக்குவரத்து தொழில்கள் (Mechanic. Drivers etc) மூலம் நன்கு சம்பாதிக்க முடியும். லாரி, பஸ்கள் நடத்துதல் மூலம் நன்கு பணம் சேர்க்க முடியும். டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்களாகவும் பணி புரிவார்கள். வெளி நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும்.

இரும்புச் சுரங்கம், நிலத்தடியில் இருக்கும் கற்கள் சுரங்கத் தொழில் போன்றவையும் ஒத்து வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலும் வெற்றி தரும். கட்டிட வேலைகள், இன்சினியரிங் பணிகள் இவர்களுக்குப் பிடித்தமானவை! கடுமையான உழைப்பை எதிர்பார்க்கும் தொழில்கள், கருவிகளை இயக்குபவர்கள் (Heavy M/C Operators) போன்றவையும் இவர்களுக்கு நன்கு அமையும்.

உழவுத் தொழிலும், எண்ணெய், இரும்புகள், லாரி வியாபாரங்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையும் இவர்களுக்கு உரிய தொழில்கள். சிறைச்சாலைத் துறை, மக்கள் நிர்வாகத்துறை, தோல், செருப்பு (Leather) விற்பனையும் இவர்களுக்கு நன்கு அமையும்.

நில அளவையும், விவசாயமும் இவர்களுக்கு ஒத்து வரும். எண்ணின் ஆதிக்கம் குறைந்தவர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் இவர்களுக்கு ஒத்து வரும்.

எட்டாம் எண்காரர்களுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்து : E,H,N,X
நன்மை தரும் தேதி : 5,14,23
நன்மை தரும் கிழமை : புதன், சனி
நன்மை தரும் நிறம் : சாம்பல், பச்சை
நன்மை தரும் திசை : வடக்கு
நன்மை தரும் தொழில் : எண்ணெய், இரும்பு, கெமிக்கல், கிரானைட், வக்கீல், கார்

 

எட்டில் பிறந்த பிரபலங்கள்
ஈ.வெ.ராமசாமி : 17.9.1879
எம்.ஜி.ஆர். : 17.1.1917
எலிசபெத் டெய்லர் : 17.1.1901
குருநானக் : 8.11.1470
ஜார்ஜ் பெர்னாட்ஷா : 26.7.1856

உங்களது பிறந்த தேதி:7

March20

உங்களது பிறந்த எண் 7 – கேது (Dragon’s Head)  

 

எண் ஏழுக்கான பலன்கள்:

இப்போது இல்லற சந்நியாசிகளான 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது! தங்களது பலவீனத்தை எப்படி போக்குவது என்ற சிந்தனையில் தேவர்கள் ஆழ்ந்தனர்.

மகா விஷ்ணுவின் ஆலோசனைப்படி தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து, உலக நன்மைக்காகப் பாற்கடலை, மேருமலையை மத்தாகக் கொண்டு கடைந்தனர்.

பாற்கடலைக் கடையும்போது, திடீரென அதன் அச்சு சாய்ந்துவிட்டது! அதைச் சீர்ப்படுத்தவே தேவர்களின் பிராத்தனையின்படி திருமால் மச்ச அவதாரம் எடுத்து மேருமலையை நிமிர்த்திக் கொடுத்தார். தேவர்கள் மீண்டும் கடைவதற்கு உதவினார்.

பின்பு பாற்கடலில் இருந்த, முதன்முதலாகக் கொடிய விஷம் திரண்டு வந்தது! அதைப் பார்த்துப் பயந்து ஓடிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரும் அந்த ஆலகால நஞ்சைத்தானே எடுத்து அதை அருந்தினார். ஆனால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, சிவபெருமானின் கண்டத்திலேயே (தொண்டை ஸ்ரீ அந்த நஞ்சை நிறுத்தி விட்டார். அன்றிலிருந்து சிவபெருமானும் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்) பாற்கடலிலிருந்து இதன்பிறகு காமதேனு, லட்சுமி போன்ற தேவர்களும் மேலும் அரிய பொருகளும் பாற்கடலிருந்து தோன்றின! இறுதியாகத் தன்வந்திரி பகவான் தன் கையில் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். அதைப் பங்கு போட்டுக்கொள்வதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் பிரச்சினை எழுந்தது! தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் ஓடினார்கள். அமுதத்தை தங்களுக்குப் பெற்றுத் தரும்படி வேண்டினார்கள்.
எனவே விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய அழகால் அசுரர்களின் மதியினை மயக்கினார். தேவர்களை ஒரு வரிசையாகவும், அசுரர்களை எதிர் வரிசையாகவும் அமர்த்தி, முதலில் மிகவும் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார்.
இந்தச் சூழ்ச்சியைத் தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு விஷ்வபாகு என்ற அசுரன் சாமர்த்தியமாகத் தேவர் உருவம் எடுத்துக் கொண்டு, சூரிய, சந்திரர்களிடையில் வந்து அமர்ந்து கொண்டார். பின்பு அமிர்தம் அவரது கைக்கு வந்தவுடனே, மிகவும் அவசர அவசரமாக உட்கொண்டார். சந்தேகமடைந்த சூரிய சந்திரர்கள் விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் சூழ்ச்சியைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்தனர். இதையறிந்த திருமாலும் அரக்கன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அமிர்தம் ஊற்றிய சட்டு வந்தால் (கரண்டி), அசுரனின் உடலைத் துண்டித்துவிட்டார். அமுதம் உண்டதால் அந்த அரக்கன் சாகவில்லை! பாம்புவின் உடலைப் பெற்றுச் சிரஞ்சீவியானான்.

விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் உடலானது பாம்புவின் தலையைப் பெற்றுக் கேது (Kethu) வானர், விஷ்வபாகுவின் தலையானது பாம்புவின் உடலைப் பெற்று இராகுவானது.
நைசிர்க (இயற்கை) பலத்தில் இராகுவும், அதைவிடக் கேதுவும் பலம் பெற்றவர்கள். சூரியனைவிட இவர்கள் பலம் பெற்றவர்கள் (மற்ற ஆறு கிரகங்களைவிடப் பலம் வாய்ந்தவர் சூரியன்தான்) இந்த இராகு கேது பற்றிய புராணக்கதை வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சுருக்கமாக இந்தக் கதையை கொடுத்துள்ளேன்.

சிவபெருமான், ஆலகால நஞ்சை உண்ட பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தாண்டவம் ஆடினார். அம்பாளும் அவருடன் இணைந்து ஆடினார். இதையே பிரதோஷ கால நடனம் என்பார்கள். அந்த அரிய சிவபார்வதி நடனத்தைத் தேவர்கள் அனைவரும் கண்டு களித்தனர். தங்களது வேதனைகளையும், தோல்விகளையும், பாவங்களையும் தேவர்கள் போக்கிக் கொண்டனர். அந்தப் புண்ணியதினம்தான் பிரதோசம் என்று அழைக்கப்படுகிறது! திரயோதசி திதி வரும் தினத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம் மிகவும் புண்ணியமானது. எந்த ஒரு பாவத்தையும் நீக்க வல்லது! பிரதோஷ காலவிரதமே அனைத்து விரதங்களையும்விட, மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கருதப்படுகிறது!

இது புராண நூல் இல்லை என்றாலும், இராகு, கேதுகளின் பிறப்பைப் பற்றியும் வாசகர்கள் அறிந்து கொண்டால்தான் இராகு, கேதுக்களின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். வெளிநாட்டினருக்கு, இந்தக் கதை தெரிந்ததால்தான் இராகுவை Dragons Tail என்றும், கேதுவை Dragons Head . என்றும் அழைத்தனர்.

இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது! மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப்பட்டவை! ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை மிகுந்த எண்ணாக உள்ளது!

இவர்களது பேச்சில் எப்போதும் பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7ம் எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும், வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும். ஆனால் நடு வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதை ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.

இவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும். தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ) ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த 7ம் எண்ணில் பிறந்தவர்களே!
இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும்! இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள். பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது! வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரும். கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறு யாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பது சோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத் தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள்.

7ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்வி அமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்த தடைப்படும். பெரும்பாலான 7-ம் எண்காரர்கள் இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.

பல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக் காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரென தாழ்ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள்.

ஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன் வாழ்க்கையில் போராடுவார்கள். 3ம் எண்காரர்கள், போன்று இவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். அண்ணன் சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை! மனைவி அவமதிக்கிறாளா என் தலைவிதி! என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு! மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது!

ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன!

பொதுவாகத் தங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள்.
இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள். அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.

தொழில்கள்:

இவர்கள் சினிமா நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பார்கள். இந்த எண்காரர்கள் பிரபல பாடர்களாக, கலைஞர்களாக, கவிஞர்களாக, புகழ்பெற்ற எழுத்தாளர்களாக பெரிய விடுதிகளின் உரிமையாளர்களாக இருப்பார்கள்.

ஜவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால், தயிர், சோடா பானவகைகள், ஐஸ்கிரீம், புகையிலைப் பொருள்கள்(பீடி, சிகரெட்) விற்பனை போன்ற தொழில்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். திரவ சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குப் பெருத்த இலாபங்களைக் கொடுக்கும். உத்தியோகங்களில் சிறப்பிருக்காது! அதாவது பதவி உயர்வுகள் ஏதாவது ஒரு காரணம் முன்னிட்டு இவர்களுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும். சமையல் கலைகளிலும், பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

சட்டம், நீதித்துறை ஆகியவற்றிலும் வேலைகள் அமையும். மருந்துக் கடையும் இவர்களுக்குச் சிறந்த இலாபத்தைத் தரும். அயல்நாட்டு வியாபாரங்களும், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரமும் இவர்களுக்குச் சிறந்தது! பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்கு ஒத்துவரும்.

ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xerox கடை ஆகியவையும் அமைக்கலாம். இவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலிலும் ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம், படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முயன்றால் முன்னேறலாம்.

போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்ற தொழில்களும் சிறந்தவை! சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும் சிறந்தவையே!

திருமண வாழ்க்கை:

இல்லறத் துறவிகள் என்பவர் இவர்கள்தான். இவர்களுக்குத் திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின் திறமையை பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். பெரும்பாலோர் சுமாராகத்தான் இருப்பார்கள். தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான்.

இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8-ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது! 9ம் எண் நடுத்தரமானதுதான். இல்லற வாழ்வில் மட்டும் ஏனோ தகுந்த வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமைவதில்லை. பிரிவு சோகமும் இவர்களைத் தொடர்ந்து வரும்.

நண்பர்கள்

1, 2, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்காரர்களில் இவர்களுக்கு பெருத்த உதவியும், முன்னேற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலும் இவர்களுக்கு ஒத்துவரும்.

நோய்கள்:

மனக்கவலைகளும், மனச்சோர்வும் அடிக்கடி இவர்களைப் பாதிக்கும். சிறிய தொல்லைகளையும் பெரிதுபடுத்தி, கவலைப்படும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்குச் சீரணக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டு.

மலச்சிக்கலுக்கு, ருமேட்டிஸம் (Rhymatism) போன்ற பல நோய்களும், தோல் வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படும்.

உடம்பில் நீர்த்தாகம் அதிகமுண்டு. எனவே ரசமுள்ள பழங்களை அடிக்கடி உணவில் கொண்ண வேண்டும். உடம்பில் கட்டிகள், கொப்புளங்கள் அடிக்கடி வரும்.

இவர்களுக்கு மண் பாத்திரங்களில் செய்யப்படும் உணவுகள், பானங்களால் நன்மையே விளையும். இவர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள் இதனால் கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

கேது மந்திரம்:

பலாச புஷ்ப ஸ்ங்காஸம்
தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்!

எண் 7- சிறப்புப் பலன்கள்:

இப்போது உலகில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் 7ம் எண்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம். இது நெப்டியூன் என்னும் கிரகத்தைக் குறிப்பதாக இருக்கிறது என்று மேல்நாட்டினர் கூறுவர். இதைச் சந்திரனின் பிரதிபலிப்பு என்றும் கூறுவார்கள்.

இவர்கள் தெய்வீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். கடவுள் பக்தி அதிகம் நிறைந்தவர்கள். மனஅமைதி குறைவானவர்கள். இவர்கள் மனத்தில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த எண்களில் பிறந்தவர்கள் உள்ளூரில் புகழ் பெற முடியாது. வெளியூர், வெளிநாடு என்று பணத்திற்காகவும், தொழிலுக்காகவும் புறப்பட்டு விடுவார்கள். தூரத்திலுள்ள நாடுகளின் மீது மிகுந்த ஆர்வமும், அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும். பயண நூல்களை எல்லாம் விருபிப் படிப்பார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் நல்ல எழுத்தாளராகவோ, ஓவியர்களாகவோ, கவிஞர்களாகவோ ஆகின்றனர். சிறந்த நடிகர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் எல்லாம் இவர்களே! 2-ம் எண்ணின் மறுபக்கம் இந்த எண்ணாகும். இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில் எப்போதும் மிகுந்த ஈடுபாட்டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்து ஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம், தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தர்ம ஸ்தாபனங்களுக்கும். தெய்வத் திருப்பணிகட்கும் செலவிடத் தயங்க மாட்டார்கள்.

7-ம் எண்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களாகப் புகழ் பெறுவார்கள். தங்களது மதங்களில் தீவிரமாக நாட்டம் கொள்வார்கள். வழக்கமான பாதையில் செல்வது இவர்களுக்குப் பிடிக்காது. எனவே, மக்களின் சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள்.

இவர்களுக்குப் பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும். இவர்களின் கனவுகள் பலிதமாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள். இவர்களிடம் பிறரை வசியப்படுத்தும் சக்தியுண்டு! மிக எளிதாக எவரையும் இவர்கள் வசியப்படுத்தி விடுவார்கள். கடுமையான உழைப்பும், எதையும் ஒழுங்காகவும், சரியாகவும் செய்து முடிக்கும் இயல்பும் இவர்களை வெற்றிப் பாதையில் ஏற்றிவிடும். இராஜயோகம், மந்திரம், தியானம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். முழு மனதுடன் அவைகளை அப்பியாசிப்பார்கள். இவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பி அணிவார்கள். இல்லறத் துறவிகளாகவே பெரும்பாலோர் இருப்பார்கள்.

வார்த்தைகளை இவர்கள் நிதானமாகவே பேசுவார்கள். யாரிடமும் கலகலப்பாக இருக்கமாட்டார்கள். ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தோன்றுவார்கள். ஒரு பெரிய காரியத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்த பொறுமையுடன் செயலாற்றி, வெற்றி பெற்றும் விடுவார்கள்.
இவர்களுக்கு இளவயதில் பல தடைகளும் கசப்பான அனுபவங்களும் ஏற்படும். திருமணம் அமைவதில் தாமமமாகும். திருமண வாழ்விலும் பல தடைகள் உண்டு; வேலை விஷயமாகவோ, அல்லது வேறு பிரச்சினைகள் காரணமாகவோ, அடிக்கடி மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும்.

கேதுவின் ஆதிக்கம் குறைந்தால், கெட்ட காரியங்களிலும் துணிந்து ஈடுபடுவார்கள். காவி உடை கட்டிய வேஷதாரியாவார்கள். இவர்களது முயற்சிகளெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், கடைசி நேரத்தில் பாதிக்கப்படும். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை பலபேருக்கு அமையும். சிறு வயது முதலே, தன்னம்பிக்கைதான் இவர்களது முதல் நண்பன் 7-ம் எண்காரர்கள் பிறக்கும்போது, அவர்கள் குடும்பத்திற்குப் பல சோதனைகளும், விரயங்களும் ஏற்படும். இளம் வயதிற்குப் பின்புதான்(25 வயதிற்குப் பின்பு) இவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத் திருப்பங்கள் ஏற்படும்.

இவர்கள் பெரிய மதத் தலைவராகவோ, கலைஞராகவோ, தொழிலதிபர்களாகவோ முன்னேறிப் பெரும் பணம், புகழ் குவிக்கும் யோகம் உண்டு.

தங்களுக்கு வரும் இடையூறுகளைக் கண்டு கலங்கமாட்டார்கள். உடல், பொருள், ஆவி மூன்றையுமே பொது வாழ்க்கைக்கென அர்ப்பணம் செய்வார்கள். எவ்வளவு வந்தபோதிலும், தங்களது லட்சியத்தைக் கைவிடாமல், பிடிவாதத்துடன் செயலாற்றி, வெற்றி அடைவார்கள்.

மனைவி மட்டும் பல அன்பர்களுக்குத் திருப்திகரமாக அமையாது. அப்படி அமைந்துவிட்டால் பிரிவும், மனைவிக்கு நோய்களும் அடிக்கடி ஏற்படும். சில சமயங்களில் மட்டும் கலகலப்பாகப் பழகுவார்கள். பல சமயங்களில் தனிமையை விரும்புவார்கள். 6-ம் எண்காரர்கள் எதையும் பணத்தில் நாட்டம் கொண்டு பார்ப்பார்கள். ஆனால் இவர்களோ கலைக்காகவே அதில் ஈடுபடுவார்கள். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால், மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவே, தங்களது வாழ்க்கையைச் செலவிடுவார்கள்.

உடல் அமைப்புறி – Physical Appearance:

இந்த எண்காரர்கள் பொதுவாக உயரமும், சற்று மெலிந்த உடலும் கொண்டிருப்பார்கள். உடல் உறுப்புகள் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும். மூக்கு சற்று நீண்டு வளைந்து காணப்படும். கை, கால் விரல்கள் திருத்தமாகவும் அழகுடனும் இருக்கும். சில அன்பர்களுக்குச் சிறு உடல் குறைவும் அமைந்து விடுகிறது.

அதிர்ஷ்ட இரத்தினங்கள் – Lucky Gems:

இவர்களுக்கு வைடூர்யம் (CAT’S EYE) இரத்தினமே மிகவும் அதிர்ஷ்டகரமானது! சந்திர காந்தக்கல்லும் (MOONSTONE) நன்மையளிக்கக்கூடியதே!

MASSAGATE மற்றும் OPAL (வெள்ளை நிறம்) ஆகிய இரத்தினக் கற்களையும் உபயோகிக்கலாம். நன்மையே தரும். TIGER-EYE எனப்படும் கல்லும் யோகமான பலன்களைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட தினங்கள் – LUCKY DATES:

ஒவ்வொரு மாதமும் 2, 11, 20, 29ந் தேதிகள் மிகுந்த அதிர்ஷ்டகரமானவை. 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் நன்மையே அளிக்கும்.

7, 16, 25 ஆகிய நாட்கள் சுமாரான பலன்களையே கொடுக்கும். எனவே தவிர்த்து விடவும். கூட்டு எண் 7 அல்லது 8 வரும் நாட்களையும் ஒதுக்கி விடவும். அதே போன்று கூட்டு எண் 2 மற்றும் 1 வரும் நாட்கள் அதிர்ஷ்டமானவை.

அதிர்ஷ்ட வர்ணங்கள் – Lucky Colours:

வெண்மை நிறம் மிகவும் ஏற்றது. இலேசான மஞ்சள், பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் சிறந்தவையே. கரும் சிவப்பையும், கருப்பு நிறத்தையும் தவிர்க்க வேண்டும். ஞிவீsநீஷீ(பல வர்ண) வர்ண உடைகளும் அதிர்ஷ்டமானவை.

7-ஆம் தேதி பிறந்தவர்கள்:

வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உடையவர்கள். இவர்களுக்கு மனைவியும் வெளிநாடு, அன்னிய சம்பந்தம் அல்லது அடுத்த ஜாதி போன்றவற்றில் அமைவர். இவர்கள் மிகவும் கண்டிப்பு மிக்கவர்கள். நேர்மையை மிகவும் மதிப்பார்கள். ஆன்மிகத்தில் மிகுந்த விருப்பமுடையவர்கள். நல்ல ரசிப்புத் தன்மையும் உடையவர்கள். மற்றவர்களின் கருத்தைக் கேட்பவர்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். மனைவியை ஓரளவு அனுசரித்துச் சென்றால் நல்ல வாழ்க்கை அமையும்.

16-ஆம் தேதி பிறந்தவர்கள் :

இவர்கள் கலை உள்ளம் நிறைந்தவர்கள். துணிச்சலும் அறிவுத் திறமையும் உண்டு. நன்றாக முன்னுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு பொருள்களை இழக்கும் அபாயமும் உண்டு. எனவே, கவனமாக இருக்க வேண்டும். மனோசக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கு குழந்தை பிறப்பது சற்றுத் தாமதமாகும். இவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். முறை தவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாதிருக்க வேண்டியது மிகவும் அவசியம். திடீர்ப் புகழ் உண்டு.

25-ஆம் தேதி பிறந்தவர்கள்:

இவர்கள் தெய்விகத் தன்மை நிறைந்தவர்கள். மக்களுக்கு வழிகாட்டவே பிறந்தவர்கள். சிறந்த கற்பனைவாதிகள். குடும்ப வாழ்க்கை சரிவர அமையாது. எனவே ஆன்மிகத் தலைவராகவோ, நீதிபதியாகவோ மாறி விடுவார்கள். பேரும் புகழும் அடைவார்கள். இவர்கள் நல்ல திறமைசாலிகள். இவர்கள் அரசியலிலும் ஈடுபட்டு எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளை அடைந்து, மக்களுக்கு உண்மையான சேவைகள் செய்வார்கள்.

எண் 7க்கான (கேது) தொழில்கள்:

இவர் ஆகாயத்தோடு தொடர்புடைய தொழில்களில் வெற்றியைத் தருபவர். Computer, Sattelite தொழில்கள், Cable Operators போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள். உத்தியோகத் துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காது.

இவர்கள் தண்ணீரின் மூலம் செய்யும் தொழில்களில் வெற்றி பெறுவார்கள். சமையல் தொழில், சித்திரம் வரைதல் தொழிலும் நன்கு வரும்.

இவர்கள் மத விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள் அல்லது எதிர்ப்பார்கள். பெரிய புகழும், பொருளும் இறுதிக் காலத்திற்குள் சம்பாதிப்பார்கள். கம்ப்யூட்டர் கல்வி பயிற்றுவிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள். பலர் வெளிநாடுகளில் பணியாற்றுவார்கள்.

மர விற்பனை, மரச்சாதனங்கள் விற்பனை, பாத்திரங்கள் தயாரித்தல் T.V. Computerஉற்பத்தி செய்தல் மற்றும் பழுது பார்த்தல் தொழிலிலும் நன்கு அமையும்.

மருந்துகள், மருத்துவம் தொடர்பான தொழில்கள், வியாபாரங்கள் அமையும். மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகள் கலைஞர்கள் இவர்களே!

கதை, கவிதை, வேதங்கள் ஆன்மீகம், சமூக சேவை செய்தல், Grainite Tiles வியாபாரம் போன்றவையும் ஒத்து வரும்.

பிராணிகளைப் பிடிக்கும் தொழில், விஷ சம்பந்தமான பொருட்கள் தயாரித்தல் போன்றவையும் நன்கு அமையும். சூட்சுமமான மூளைத் தொழிலாலான Scientist, Research துறை, Space-craft துறையும் நன்கு அமையும். நியாயம், நேர்மையை அதிகம் மதிப்பவர்கள் இவர்கள். நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள் (Doctors) ஆகிய தொழில்களும் நன்கு இருக்கும். பலர் அரசியல் வானிலும் பிரகாசிப்பார்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்கு அமையும். தொழிலுக்காக குடும்பத்தினரை அடிக்கடி பிரிவார்கள்.

ஏழாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள் : O,Z,R,K,B,A,I,J,Q,U,V,W
நன்மை தரும் திகதிகள் : 1, 2, 6, 7, 10, 11, 15, 16, 19, 20, 24, 25, 28, 29
நன்மை தரும் கிழமைகள் : ஞாயிறு, திங்கள், வெள்ளி
நன்மை தரும் நிறங்கள் : வெள்ளை, இளஞ்சிவப்பு
நன்மை தரும் திசைகள் : கிழக்கு, மேற்கு
நன்மை தரும் தொழில்கள் : இலத்திரனியல், பூஜைப் பொருட்கள், ஏற்றுமதி,
சினிமா, அரசியல், ஆன்மிகம், சேவை நிறுவனம்,
கட்டுமானம், சங்கீதம், அச்சகம், எழுத்துத்துறை,
நீதித்துறை, மருத்துவம்
7ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
இயேசுநாதர் : டிசம்பர் 25
கிருபானந்த வாரியார் : 25.08.1906
எம்.எஸ்.சுப்புலட்சுமி : 16.09.1916
வாஜ்பாய் : 25.12.1924
சார்லி சாப்ளின் : 16.04.1889

உங்களது பிறந்த தேதி:6

March20
உங்களது பிறந்த எண் 6 – சுக்கிரன் (Venus) \

 

எண் ஆறுக்கான பலன்கள்:

ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள்.

இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள்.

இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பாக்£ள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது! இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.

இவர்களுக்க 5-ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு. இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே!

எனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள்.

இவர்களின் காம உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை! ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை!

பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே நிறைந்து காணப்படும். எப்போதும் இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் ‘விஜயலட்சுமி’ எப்போதும் இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போதும் நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன் வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.தொழில்கள்:

இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, டிராமா, இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகளில், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம்! மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசு அதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே! ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும்.

முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே! சங்கீதம், வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள் ஈட்டலாம்.

திருமண வாழ்க்கை:

திருமணத்தின் மூலம் ஆதாயமும், இலாபமும் கிடைக்கின்றனவா என்றே இவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். இருப்பினும் திருமணத்திற்குப் பின்பு மனைவியை நன்கு வைத்துக் கொள்வார்கள்! மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு (?) ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.

மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.இவர்களது நண்பர்கள்:

6, 9 தேதிகளில் பிறந்தவர்களுடன் நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 1, 5 ஆகிய தேதிகளில் பிறந்தோராலும் ஓரளவு நன்மை உண்டு. 3 எண்காரர்களின் தொடர்பும் கூட்டும் கூடாது! ஆனால், 3 எண்காரர்களால் தான்இவர்களுக்கு மிகப் பெரிய விதி வசமான உதவிகள் கிடைக்கும். ஆனால் அவை இயல்பாகவே எதிர்பாராமல் அமையும். இவர்களாகத் தேடிச் செல்லக்கூடாத.(3ம் எண்காரர்களால்) வேதனைதான் மிஞ்சும்.

இவர்களது நோய்கள்:

பொதுவாகச் சாப்பாட்டு பிரியர்கள். எனவே உடல் பருமன் பிரச்சினைகள் உண்டு. இதய பலவீனம் (பிமீணீக்ஷீt றிக்ஷீஷீதீறீமீனீ) இரத்த ஓட்டக்கோளாறுகள் ஏற்படும். இந்திரியம் அதிகம் செல வு செய்பவர்களாதலால் பிறப்புறுப்புக் கோளாறுகள், நோய்கள் ஏற்படும். மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். புகைபிடித்தல், மது போதைப் பொருட்கள் போன்றவற்றையும் அறவே ஒதுக்கிவிடவேண்டும்.

அடிக்கடி மூச்சுத் தொந்தரவுகளும், சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும். மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் தினமும் உலாவி வரவேண்டும். இதன் மூலம் பல நோய்களைத் தவிர்த்து விடலாம். இந்த எண்காரர்கள் பக்தி, பொதுத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இவர்களுக்குப் பெரும் புகழும், அமைதியான வாழ்க்கையும் நிச்சயம் ஏற்படும்.

சுக்கிரன் மந்திரம்:

ஹிமகுந்த ம்ருணாளாபம்,
தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

எண் 6. சிறப்புப் பலன்கள்:

உலக சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களான 6ஆம் எண்ணைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.இவர்களுக்கு இந்த பூ உலகம் சொர்க்கமாகத் தெரியும். இந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்ப உணர்வுடன் வாழ்பவர்கள் இவர்களே! அசுர குருவான சுக்கிரனின் ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல் சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் (ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு!

இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும் (திமிழிணி கிஸிஜிஷி) போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவார்திகள். அதிகம் செலவு செய்து, அழகான வீடு, பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்கள்.

இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதே கருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப்படி? பணத்தை இன்னும் பெருக்குவது எப்படி என்று சிந்தித்தே, காய்களை நகர்த்துவார்கள். 6 எண் வலுப்பெற்றால், ஆன்மீகத்திலும் வெற்றி அடைவார்கள்.
லாட்டரி, குதிரைப்பந்தயம் இவைகளில் மிகுந்த ஆர்வமும், அவற்றில் அதிர்ஷ்டமும் உண்டு. தங்களது சுயலாபத்திற்காகவே, அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள்.

எக்காரியமானாலும் நன்றாகச் சிந்தித்தே ஒரு முடிவுக்கு வருவார்கள். தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கத் தயங்குவார்கள். மந்திரங்கள், மாய தந்திரங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அவற்றைக் காசாக்குவதில் வல்லவர்கள். இவர்கள் செல்வத்தைக் குவித்திடும், லட்சுமியின் புத்திரர்கள் ஆவார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் உண்டு. இன்பங்கள் துய்ப்பதில் சலிக்க மாட்டார்கள். அதற்கேற்றவாறு உடல் சக்தியும் மிகுந்திருக்கும். இவர்களது உருவம் அழகாக இருப்பதால் பெண்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களும் இவர்ளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இன்ப அனுபவங்களில் தீவிர ஈடுபாடு உண்டு. தலைமுதல் பாதம் வரை ஒரே சீராகவும், அழகாகவும் இருப்பார்கள். அழகான உடை, மற்றும் வாசனைத் திரவியங்கள் மூலம் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தினையும் மிகவும் அழகாக வைத்துக் கொள்வார்கள்.

காதல் விஷயங்களில் அதிர்ஷ்டகாரமானவர்கள். அதிக காம குணம் இருப்பதால், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். (எண்ணின் பலம் குறைந்தால் ஸ்திரீலோலர்கள் ஆகிவிடுவர்)

இவர்களுக்கு நல்ல அழகும், குணங்களும் உள்ள கணவன்- மனைவி அமைவர். தம்மிடமுள்ள கவர்ச்சியை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே, திருமணமாகாதர்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து சமாளித்துக் கொள்ளலாம்.

பொதுவாக இந்த எண்காரர்களுக்கு உணவு, உடை, வீடு ஆகியவற்றில் குறைபாடுகள் வாராது. வசதிகளை எப்படியும் உருவாக்கிக் கொள்வார்கள்! பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும்.

சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே! இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும் உண்டு.

கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்து செல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும்.

இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு! பெண் குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே! இவர்களால் தான் உலகில் பழைய கலைகளும், இலக்கியங்களும் இன்னும் நிலைபெற்று உள்ளன.

அதிர்ஷ்ட தினங்கள் – Lucky Dates:

ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக்க அதிர்ஷ்டகரமானவையே! கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.

ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது! நடுத்தரமான பலன்களே கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – Lucky Colours:

இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்த வண்ணங்கள்! இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கூட்டுவிக்கும். வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும்.

அதிர்ஷ்ட இரத்தினங்கள் – Lucky Gems:

இவர்களுக்கு மரகதமே (பச்சை என்பார்கள்) சிறந்தது. ஆங்கிலத்தில் EMERALD என்பார்கள். மேலும் AQUAMAIRNE, JADE, BERYL, PARIDOT, TURQUOISE (பச்சை நிறம்) போன்ற இரத்தினக் கற்களும் அணிந்துவர, யோகங்கள் பெருகும். AMETHYST (செவ்வந்திக்கல்) அணியவே கூடாது!

6-ஆம் தேதி பிறந்தவர்கள் :

எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும் காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64 கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம் வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள். சுகம் நிறைய அனுபவிப்பார்கள்.

15-ஆம் தேதி பிறந்தவர்கள்:

மற்ற மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு. எதிரியை எடை போடுவதில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் எதிரிகளை எப்போதும் மறக்க மாட்டார்கள். பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.

24-ஆம் தேதி பிறந்தவர்கள் :

அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும் ஆனால் அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும், பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்து முடிப்பார்கள். எனவே, விரைவிலேயே கிடைத்துவிடும். சிலர் விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். தமக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.

எண் 6க்கான (சுக்கிரன்) தொழில்கள்:

இவர்கள் கலைத் துறைக்காகவே பிறந்தவர்கள். கலையின் பல துறைகளிலும் ஈடுபடுவார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்ற கவின் கலைகளில் (Fine Arts) வெற்றி பெறுவார்கள். சிலர் சட்ட நுணுக்கம் பேசி பணம் அதிகம் சம்பாதிக்கும் வக்கீல்களாகவும், மருத்துவர்களாகவும் இருப்பார்கள். பெண்களின் அழகு சாதனங்கள் உற்பத்தி மிகவும் விற்பனை துறைகள் நன்கு அமையும்.

பட்டு மற்றும் ஜவுளி வியாபாரம், முத்து, பவளம், வைர வியாபாரம் உகந்தவை! இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்! நளினமாக நடித்துக் காண்பிக்கும் குணமும் உண்டு.

திரைப்படத் தொழில், ஒப்பனைத் தொழில், காட்சி அமைப்புகள் தயார் செய்தல் போன்றவையும் நன்கு அணியும். மதுபான வகைகள், நெல்லி, எலுமிச்சை, தானியங்கள், அரிசி, உப்பு, வாசனைப் பொருட்கள் வியாபாரம், உணவுவிடுதி, தங்கும் விடுதி (Lodge) நடத்துதல், ஜோதிடம் பார்த்தல், பசு, பால், நெய் வியாபாரம், அழகு தையல் நிலையங்கள், ஆண், பெண் அழகு நிலையங்களும் இவர்களுக்கு ஏற்றவை! Fashion Designing, Garment தொழில்களும் உகந்தவை. இயற்கையை இரசிப்பவர்கள், சிலர் மருத்துவத் துறையிலும் பிரகாசிப்பார்கள்.

6ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்

மகான் அரவிந்தர் : 15.08.1872
அண்ணாத்துரை : 15.09.1909
காமராஜர் : 15.07.1903
ஜெயலலிதா : 24.02.1948

ஆறாம் எண்ணுக்கு உகந்தவை

நன்மை செய்யும் எழுத்து : U,V,W,R,K,B
நன்மை செய்யும் தேதி : 2,6,9,11,15,18,20,24,27,29
நன்மை செய்யும் கிழமை : வெள்ளி, திங்கள், செவ்வாய்
நன்மை செய்யும் நிறம் : வெள்ளை, இளம் ரோஸ்
நன்மை செய்யும் திசை : மேற்கு
நன்மை செய்யும் தொழில் : பெண்கள் விரும்பும் தொழில்கள், சினிமா, புடைவை,
எழுதுகருவி, நகைக்கடை, வீடு விற்பது,
பிளாஸ்டிக் ஏற்றுமதி, இறக்குமதி

March12

உங்களது பிறந்த தேதி:5 எண் ஐந்துக்கான பலன்கள்:

இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது!

இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை நிச்சயம் பல தோல்விகளிலும் வேதனைகளிலும் ஆழ்த்திவிடும்.

ஆனால் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது! சோதிட சாஸ்த்திரத்தில் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும் சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது! அதனால்தான் சந்திரனின் ஆதிக்கம் ஜாதகத்தில் பொதுவாக எல்லா இராசிகளுக்கு நன்மையான பலன்களையே கொடுக்கும். கோசார பலன்களும் சந்திரனின் நிலையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

எண்கணிதத்திலும் 5ம் எண் அத்தகைய ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண் வரிசையில் 5ம் எண்ணே மற்ற எல்லா எண்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது என்பதே இதன் சிறப்புக்கும், நற்பலன்களுக்கும் காரணம். மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாக எடுத்துக் கொள்வார்கள். 5ஆம் எண்காரர்களின் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது!

ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான்! அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான்.
மற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில் மக்களைக் காத்தல் அல்லவா), 5ம் எண்ணின் பலம் உதவுகிறது! 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு! எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்று கூறுவார்கள். காந்தமானது, எந்த அளவு இரும்பினையும், எளிதாக இழுத்து விடும் தன்மை உடையது. அதேபோன்றே, மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இலர். இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் 6ம் எண்காரர்கள் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கும் ஜனவசியம் இயற்கையாக உண்டு!

இவர்களது பேச்சில் கேலியும், கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை (Presence) அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும் இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு. மேலும் இவர்களுக்கு காரில், ரயிலில், விமானத்தில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் எதிர்பாராத நண்பர்களும், அவர்களின் மூலம் நட்பு மற்றும் பரஸ்பர உதவியும் எளிதில் இவர்களுக்குக் கிடைத்துவிடும். எப்போதும் எடுப்பாகவும், அழகாகவும், ஆடைகளையும், அழகு சாதனங்களையும் அணிந்து கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். இவர்கள் சாப்பிடுவதில் வேகமாக இருப்பார்கள். பேச்சிலும் நடையிலும் வேகம் உண்டு! பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் அரசர்களையும் கவர்ந்து விடுவார்கள்.

பிறர் முறையாகக் கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும் விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே நிலையாக வைத்துக் கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாக எடுத்துக்காட்டியும் சொல்லுவார்கள். எப்போதுமே பெரிய மனிதர்களின் ஆதரவு இவருக்கு உண்டு.

தங்களது சொந்தப் படைப்புக்களைவிட அடுத்தவர்களின் கருத்துக்களையும், விஷயங்களையும் தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும் அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவம் அஷ்டாவதானிகள் இவர்கள்தான். புகழ்பெற்ற உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியர், மெஸ்மரிசம் கண்டுபிடித்த மெஸ்மர் போன்றவர்களெல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே!
தொழில்கள்:எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல்துறையிலும், அதிர்-ஷ்டம் உடையவர்கள். இவர்களது பேச்சிலும் விவாதங்களிலும் அரசியல் கலப்பு அதிகமாக இருக்கும். அறிவியல் துறைப் பணிக்கும் (Science), கலைத்துறை, சோதிடம், கணிதம் போன்ற துறைகளும் ஏற்றவை! நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களாக புகழ்பெறுவார்கள்.

இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். (Any Business) ஜனவசியம் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தரகர்களாகவும் (Brokers) கமிஷன் முகவர்களாகவும் மிகவும் புகழ் பெறுவார்கள். பிரயாண முகவர்களாகவும் (Travel Agents) நன்கு சம்பாதிப்பார்கள். இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்து கொண்டிருக்கிற போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள்! இதைப்போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களை மாற்றக்கூடாது. ஆனால் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றி அடையலாம்.

உலகத்தின் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக (Ambassadors) நன்கு விளங்குவார்கள். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள் ஆகியவையும் இவர்களுக்கு வெற்றி தரும். பொது மக்கள் தொடர்பு சம்பந்தமான (P.R.O) தொழில்களிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

திருமண வாழ்க்கை:

இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

நண்பர்கள் – கூட்டாளிகள்:

பொதுவாக மற்ற எண்காரர்கள் அனைவரும் இவர்களுக்கு நண்பர்களே! குறிப்பாக 9, 1, 6 தேதிகளில் பிறந்தவர்கள் இவர்களுடன் மிகவும் அதிகமாகப் பழகுவார்கள். இவர்கள் யாருடனும் கூட்டுத் தொழில் சேர்ந்து செய்யலாம். மற்ற எண்காரர்களை, அனுசரித்துச் சென்று, வெற்றி பெற்று விடுவார்கள்.

நோய்கள்:பொதுவாக இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அமைதிக் குறைவு, மனஇறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். நரம்பு பலவீனமே அதிகமாகப் பாதிக்கும். அடிக்கடி ஏதாவது நரம்புகளில் வலி ஏற்படும். சிறுவயதுகளில் காக்கை வலிப்புப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனவே இவர்கள் முன்பு சொன்னபடி நல்ல தூக்கம் நல்ல உணவு ஆகியவைகளைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத் தவிர்த்துவிடலாம். சிற்றின்ப இச்சைகளை ஓரளவு குறைத்துக் கொண்டால், நரம்பு பலம் கூடும். கடுமையான நிலைகளில் நரம்புகளின் பாதிப்பால் பக்கவாதம், ஒருபுறம் நரம்புகள் சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே இவர்கள் உணவில் அதிகமாகப் பருப்பு வகைகள் தானியங்கள் ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புதன் மந்திரம் :

ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம்புதம் பிரணமர்மயஹம்

எண் 5 -ன் சிறப்புப் பலன்கள்:

9 எண்களிலும் 5 தான் அனைவராலும் விரும்பப்படுகிறது! காரணம் 5ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது! இந்த எண்ணே மற்ற அனைத்து மக்களையும் (எண்களையும்) ஈர்க்கும் சக்தி மிகுந்த எண்ணாகும்.

எனவே, இவர்கள் எளிதில் அனைவரிடமும் நட்புக் கொண்டு விடுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பினர். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்தி கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள்.

மற்றவர்களைவிட அறிவுத் திறனும், திறமையும் உண்டு! இவர்கள் நெளிவு, சுழிவுகள் மிகத் தெரிந்தவர்கள். சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியிடன்தான் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். அதே போன்று இலாபங்களையும் அடைவார்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். நணடம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனம் அடையும். எனவே, சில சமயங்களில் அதிகமான வேலை செய்யும் போது, எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள். எத்துறையிலும் வேகம், வேகம் என்று செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். பிறரைத் தூண்டி விட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள். உடல் உழைப்பில் நாட்டம் குறைவு! ஆனால் மூளை உழைப்பில் சிறந்த விளங்குவார்கள். மகாவிஷ்ணுவைப் (புராணங்களில்) போன்ற திறமையும், புத்திசாலித்தனமும் உண்டு!

நிறையப் பணம் கிடைப்பதென்றால், தீய வழிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். ஆனால் எப்படியாவது தண்டனையிலிருந்து தங்களது புத்தியால் தப்பித்துக் கொள்வார்கள். இவர்களைப் புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். எனவே, இவர்களைப் புகழ்ந்தே மற்றவர்கள் தங்களது செயல்களை இவர்களிடம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வு சொல்லி விட்டுவார்கள். டாக்டர், வியாபாரிகள், பொருள் ஏஜெண்டுகள் போன்று பணம் சம்பாதிக்கும் தொழில்களிலேயே இவர்களது எண்ணம் செல்லும். வெளிநாடு, வெளியூர் செல்வதென்றால், உடனே புறப்பட்டு விடுவார்கள். தங்களது பேச்சிலும், முடிவு எடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில் வந்துவிடும். அதிக உழைப்பும் ஓயாத அலைச்சலு ஆற்றலும், புத்தி சாதுர்யமும் அதிகம். சூதாட்டம், பந்தயம், புரோக்கர் தொழில் மூலம் பொருள் பணம் குவிக்கும் யோகம் உண்டு.

காதல் விஷயங்களில் ஈடுபாடு உண்டு. காதலிப்பவரையே மணக்கும் தைரியமும், பிடிவாதமும் உண்டு. வசதியான மனைவியையே தேடுவார்கள். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு அதை வெற்றியாக மாற்றிக் காட்டுவார்கள்.

5 எண்ணின் பலம் குறைந்தவர்கள் தீய காரியங்களில் துணிந்து இறங்குவார்கள். பிறரை வஞ்சித்தல், பொய் சாட்சி சொல்லுதல், ஏமாற்றிப் பிழைத்தல், போர்ஜரி போன்றவற்றில் ஈடுபட்டுக் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பார்கள். அரசாங்கப் பணிணைவிடச் சொந்தத் தொழிலே சிறப்புத் தரும். கூட்டு எண்கள் ஒத்து வந்தால் மட்டுமே அரசாங்கப் பணி சிறப்புத் தரும். இந்த எண்காரர்களை வேலைக்கு வைத்து முதலாளிகள் லாபம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் ஜனவஸ்யம் நிறைந்தவர்கள். எனவே, இவரைச் சுற்றிலும் எப்போதும் மக்கள் இருந்த கொண்டே இருப்பார்கள்.

ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்கள். அடுத்தவர்களின் கருத்துப்படி இவர்கள் நடந்தால் தோல்விகள்தான் அதிகமாகும். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். அதன்படி இவர்கள் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடாது. நிரந்தரமான ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும், புதுமையையும் புகுத்தி வெற்றி பெற வேண்டும். ஆழம் தெரியாமல், ஒன்றில் இறங்கக் கூடாது. செய்யும் தொழிலைப் பிடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, அடுத்த தொழிலில் இறங்கக்கூடாது.
இவர்கள் இரவில் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் குறையும். மனச்சோர்வுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும். எனவே, தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு, மனதைச் சலனமில்லாமல் வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பின்பு உடல் நலம் தானே வரும். சுறுசுறுப்பும், வேகமும், இலாப நோக்கும் இவர்கள் கூடப்பிறந்தவை. எனவே, வியாபாரம், கமிஷன் தொழில். டிராவல் ஏஜெண்ட்ஸ் விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல் போன்ற மக்கள் தொடர்புத் தொழில்கள் மிக்க நன்மை தரும்.

உடல் அமைப்பு, உடல் நலம் — Physical Appearance:

சற்றுச் சதைப்பிடிப்பான உடல் அமைப்பு அமையும். நடுத்தரமான உயரமும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான முகமும், கண்களும் உண்டு. நிமிர்ந்த பார்வையும், வேகமான நடையும் உண்டு.

அதிர்ஷ்ட தினங்கள் – Lucky Dates:

ஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. தே போன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும் அதிர்ஷ்டமானவையே!

இவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள். இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மை செய்வார்கள்.

அதிர்ஷ்ட இரத்தினம் – Lucky Gems:

இவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் எனப்படும். DIAMOND ஆகும். இந்தக் கற்களில் தரமான கற்கள் (ORIGINAL) கிடைப்பது அரிதாக உள்ளது. ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச் சிறந்த பலன்களையே அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – Lucky colours :

சாம்பல் நிறம் (GREY) மிகவும் ஏற்றது. அனைத்து இலேசான வண்ணங்களும் ஏற்றவையே. (LIGHT COLOURS) மினுமினுக்கும் உடைகளும், மினுமினுக்கும் வண்ணங்களும் நன்மையே புரியும்.

கறுப்பு, சிவப்பு, பச்சை போன்ற ஆழந்த (DARK) வண்ணங்களை நீக்கிக் கொள்ளவும்.

முக்கியக் குறிப்பு:
இவர்களுக்கு நரம்புச் சக்தி குறைவு. எனவே குழந்தைச் செல்வம் தடைப்படும். மனைவியின் எண்களில் 5 எண் வந்தால் குழந்தைச் செல்வத்தைக் குறைத்து விடும். எனவே மனைவியைத் தேர்வு செய்வதில், குழந்தைச் செல்வம் உள்ள எண்களாகத் தேர்வு செய்து கொள்ளவும். குடும்பத்தில் தங்களது வேகமான பேச்சையும், செயல்களையும் குறைத்துக் கொண்டால், இன்ப வாழ்க்கை அமையும். உடல் உழைப்பிலும் சற்று ஈடுபட வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு உகந்ததாகும்.

5-ஆம் தேதி பிறந்தவர்கள்:

புதன் கிரகத்தின் முழு அம்சம் பெற்றவர்கள். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும், தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. சிறு வயது முதலே குறிப்பிட்ட இலட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது.

14-ஆம் தேதி பிறந்தவர்கள் :

இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டம் உடையவர்கள். பயணத்தில் சலிக்காத நாட்டம் இவர்களுக்கு இருக்கும். பலர் புகழ்பெற்ற வியாபாரிகளாக இருப்பார்கள். இருந்தாலும் இவர்களது வாழ்க்கையில் அடிக்கடி விபத்துகள், சரிவுகள் ஏற்படும். இறைவனின் அருளால் இவர்களுக்கு துன்பங்களைச் சமாளிப்பதற்கான சூழ்நிலையும், அறிவும் உருவாகும். காதல் விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், பின்பு வாழ்க்கையே கசந்துவிடும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது. எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு!

23-ஆம் தேதி பிறந்தவர்கள்:

இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். குருச்சந்திர யோகம் நிறைந்தவர்கள். அரசாங்கத்தாரால் எப்போதும் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். ஓர் அரசனைப் போன்று அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்கள். பண்பாடும், ஒழுக்கமும் நிறைந்தவர்கள். இவர்கள் உலகத்தில் சாதனை புரியப் பிறந்தவர்கள். மக்களைக் கவர்கின்ற சக்தி நிறைந்தவர்கள். புன்னகை புரிந்தே மற்றவர்களை வென்று விடுவார்கள். இவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு மறுப்பு இருக்காது. அனைத்து மக்களின் அன்பும், ஆதரவும் கிடைப்பதால் பெரும் வியாபாரிகளாகவும் ஆன்மிகம் மற்றும் அரசியல் துறைகளில் புகழ் பெற்றதும் விளங்குவார்கள்.

எண் 5க்கான (புதன்) தொழில்கள்:

இவர்கள் கதை, கவிதை, நாடகம் எழுதல், சிற்பம் செதுக்குதல், ஜோதிடம் பார்த்தல், காகிதம், மொச்சை, பயிறு, மஞ்சள், முத்து, வெற்றிலைப் பாக்கு கொடி வகைகள் போன்ற வியாபாரங்கள்/ தொழில்கள் நன்மை பயக்கும். கல்வித் துறை, கணக்குத் துறை, தபால் துறை போன்றவற்றில் பணி செய்தல், Accountants, சொற்பொழிவாற்றுதல், புரோகிதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். ஜோதிடம் போன்ற சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள். சிலர் நாட்டின் தூதுவர்களாகவும் இருப்பார்கள்.
பொதுவாக அனைத்து வியாபாரங்களும் இவர்களுக்கு நன்மை தரும். ஆனால் பொருட்கள், கருவிகள் உற்பத்தித் துறைகளில் இறங்கக்கூடாது! Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள்! அடிக்கடி தொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம்!

ஏதாவது உபதொழில் செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள். விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவற்றிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

அறிவியல் துறைப் பணிகள், கலைத்துறை, பேச்சாளர்கள் போன்ற துறைகளும் நன்கு அமையும். இவர்கள் அறிவினால் உழைப்பவர்கள்! மற்றவர்களை வசியம் செய்து தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், வியாபாரிகள் இந்த எண்ணில் பிறந்திருப்பார்கள். Business Management கணிதம், செய்தி சேகரிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள்.

5 ஆம் எண்ணில் பிறந்தவ பிரபலங்கள்

வள்ளலார் – 05.10.1823
ஷ்ரீ தியாகராஜ சுவாமிகள் (கீர்த்தனை கர்த்தா) – 05.05.1759
வ.உ. சிதம்பரம் பிள்ளை – 05.09.1872
ஜவகர்லால் நேரு – 14.11. 1889
டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) – 14.11.1889
அம்பேத்கர் – 14.04.1891
சுபாஷ் சந்திரபோஸ் – 23.01.1897
திலகர் – 23.07.1856
வில்லியம் ஷேக்ஸ்யிர் – 24.04.1564

[எண்கணிதம்]

March12

உங்களது பிறந்த தேதி:4

எண் நான்குக்கான பலன்கள்:இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4-ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1-ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது.

வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ள இவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும், கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையை ஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி மக்கள் மனதைக் கவருவார்கள். பல மணி நேரம் பேசும் இயல்பினர். ஒரு ஜனக்கூட்டம் எப்போதும் இவர்களைச் சுற்றியே நிற்கும்.

இவர்கள் இரகசியங்களைக் காப்பாற்ற மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும், வேலையையும்,அடுத்தவரிடம் சொல்லிப் புலம்பாது இருக்கமாட்டார்கள். இவர்களிடமிருந்தே திட்டத்தை அறிந்து கொண்ட இவர்களது நண்பர்கள் அந்தத் திட்டத்தை அவர்களே விரைந்து சென்று செயலாற்றி, வெற்றி பெற்று விடுவார்கள். எனவே இவர்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் நாகாக்க வேண்டும். மேலும் 4, 3, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், தங்களது நண்பர்களாலும், சுற்றத்தார்களாலும், மற்றும் நம்பியவராலும் செய்வினைகள் மற்றும் ஏவல் கோளாறுகளை இவர்களது வாழக்கையில் அனுபவிக்க நேரிடுகிறது! இதே யோகம் 2, 8 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களுக்கும் உண்டு.

13-ம் எண் – சில உண்மைகள்:

வெளிநாட்டு மக்கள் 13-ம் எண்ணைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். உலகின் சரித்திரத்தில் பல இயற்கைச் சீற்றங்கள் 3-ம் தேதியில்தான் நடந்துள்ளன. நெப்போலியன் வீழ்ந்தது ஒரு 13ந் தேதியில்தான். கி.பி.2026 நவம்பர் 13 வெள்ளிக்கிழமையில், உலகின் மக்கள் தொகை 5000 கோடி என்ற அளவில் உயர்ந்து, திடீரென உலகம் வெடிக்க வாய்ப்புள்ளது எனறு அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியின் முடிவாகக் கூறியுள்ளனர். மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் அமிர்தசரஸில் 13.4.1919 அன்றுதான் நடந்தது!

மேலும் 13 எண் பெயரில் வரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் பல ஜீவ மரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். பெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், அயராது உழைத்திட்ட போதிலும், ஏனோ மேலதிகாரிகளால் வெறுக்கப்படுகிறார்கள். அடிக்கடி இவர்கள் வீண் பழிகளைச் சந்திக்கின்றார்கள். பல அன்பர்கள் அரசாங்க வேலையை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு.

அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் வண்டி வாகனங்களுக்குத் தவிர, மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13&ம் எண் ஏற்றதல்ல! அதுமல்மல்ல 22&ஆம் எண்ணும், 13-ஐப் போன்றே பயப்பட வேண்டியதுதான் 22-ந் தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் உள்ளவர்களில் பலர் திடீரெனத் தாழ்ந்து விடுவார்கள். பிறரால் வஞ்சிக்கப்படுவார்கள். பல அன்பர்கள் அடுத்துக் கெடுக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் இவர்களிடம் அன்பு பாராட்டியவர்களே செய்து விடுவார்கள் என்பது வேதனையான விஷயம் இந்த எண்ணின் தொடர்புடையவர்களின் வாழக்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில் திடீரெனத் தாழ்ந்து விடும் என்பதையும் மறக்கக் கூடாது!

மேலும் இந்தக் கிரகத்தின் ஆதிக்கத்திலுள்ள அன்பர்களுக்கு அடிக்க இடமாற்றம் 13, 22 எண்ணில் பிறந்தவர்கள் சுதந்திரப் பிரியர்கள். எவருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள். இவர்கள் தங்களது மேலதிகாரிகள், முதலளிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள். ரோஷமும், தன்மான உணர்வும் மிகுந்த இவர்களில், அடுத்தவர்களுக்கு அடிமையாக இருந்து முன்னேறுவதைவிட அந்த வேலையை விட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எதிர்த்து நிற்பார்கள். எனவேதான் இவர்களுக்குப் பல பிரச்சினைகளும், முன்னேற்றத் தடைகளும், தொழிலில் உண்டாகின்றன. தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றோர்களை அனுசரித்துச் சென்றால் இவர்களும் மிகுந்த முன்னேற்றம் பெறலாம்.

இவர்களது தொழில்கள்:

ஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், பேச்சாளர்கள், சோதிட நிபுணர்கள் ஆகியவை இவர்களுக்கு ஒத்து வரும். இவர்களில் பலருக்கு நல்ல ஆராய்ச்சி மனப்பான்மையும் உண்டு! துப்புத் துலக்கும் பணிகளிலும் விரும்பி ஈடுபடுவார்கள்.

நிருபர்கள், டைப்பிஸ்ட்டுகள், இரயில்வே, வங்கி ஊழியர்கள் போன்ற தொழில்களும் அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மலாளர், மேற்பார்வையாளர் போன்றவையும், இவர்களுக்கு நன்மை தரும் தொழில்களாகும். கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில்கள் (விணீக்ஷீtவீணீறீ கிக்ஷீts) ஏற்றவை. மேலும் இவர்களுக்கு மருத்துவம், சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடு தீவிரமாக அமையும்.

விமர்சனங்கள் எழுதுவதில் இவர்களுக்குத் தனித்தன்மையும், புகழும் உண்டு. புத்தகங்கள் விற்பனை, வெளியிடுதல் போன்ற தொழில்களும் நன்மையே செய்யும். மாடு, குதிரை போன்ற கால்நடைத் தரகும், லாபம் தரும். திuக்ஷீஸீவீtuக்ஷீமீ (கட்டில், பீரோ) போன்றவை, சினிமாப் படங்கள் தயாரித்தல், விற்றல் ஆகியவையும் ஒத்துவரும்! மக்கள் தொடர்பு தொழில்கள் (றி.ஸி.ளி) இவர்களுக்கு மிகவும் ஒத்துவரும் தொழிலாகும். டெய்லர்கள், கார், பைக், ஸ்கூட்டர் மெக்கானிக்குகள், எலக்ட்ரிசியன்கள், அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் வேலை போன்றவை இவர்களுக்கு அமையும்.

திருமண வாழ்க்கை:

பெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும். மனைவியுடன் எப்போதும் விதண்டாவதம் செய்பவர்களானாலும் குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள். தூய்மையே மிகவும் புனிதமாகப் போற்றுவார்கள். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் உண்டு!

இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். இருப்பினும் 4&ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6&ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.

இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

நண்பர்கள்-கூட்டாளிகள்:

பொதுவாக 1, 2, 4, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்ளலாம். 8ந் தேதி பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாமே தவிரப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 1-ம் எண்காரர்கள் இவர்களைத் தங்கள் ஆளமைக்குள் கொண்டு வந்து, இவர்களையும் முன்னேறச் செய்வார்கள்.

இவர்களது நோய்கள்:

பொதுவாக இவர்கள் பித்த ஆதிக்கம் உடையவர்கள். மனநோய்களான டென்ஷன், படபடப்பு அதிகம் உடையவர்கள். இரத்தக் குறைவு நோயும் உண்டாகும். மனச்சோர்வுகள் அடிக்கடி ஏற்படும். இருப்பினும் இவர்களுக்கு வரும் நோய்கள் உடனுக்குடன் விலகிவிடும் யோகமும் உண்டு. வாய்வுப் பிடிப்பு, சீரண சக்தி, இடுப்பு வலி, பின் தலை வலி, சோகைகள் போன்றவைகள் ஏற்படும். தலை, கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடிக்கடி வந்து மறையும்.

மாமிச உணவுகள், மசாலப் பொருட்கள் போன்றவற்றை நீக்குவது நன்மை புரியும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இவர்களை நோய்கள் அணுகாது!” அனுபவம் உள்ளவர்கள் அதிகம் பேசமாட்டார்கள்” என்பதை அவசியம் வாழ்வில் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

“நிறைகுடம் தளும்பாது” போன்ற பழமொழிகளைத் தங்களது வாழ்க்கையில் இவர்கள் கடைப்பிடித்தால் இவர்களும் நல்ல அதிர்ஷ்டத்தையும், இலாபங்களையும் அடையலாம். எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் தவிர்த்து விடலாம்.

இராகுவின் மந்திரம்:

அர்த்காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்
தம் ராஹூரும் ப்ரணாம்யஹம்

எண் 4. சிறப்புப் பலன்கள்:

இப்போது மக்கள் பிரதிநிதியான 4ஆம் எண்காரர்களின் சிறப்புப் பற்றிப் பார்ப்போம். உலகத்தில் உள்ள பலவகையான செய்திகளையும், அனுபவங்களையும் தெரிந்து கொள்வதில் இவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள்! எப்போதும் தன் இச்சைப்படி செயலாற்ற விரும்புவார்கள்.

எப்போதும் நான்கு பேருடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள். பணம் சம்பாதிக்கும்போது இருக்கும் பொறுமையை, பணம் செலவழிப்பதில் காட்டமாட்டார்கள். கையில் பணம் இருக்கும்வரை கண்ணில் பார்ப்பதை வாங்கும் இயல்பினர். நான்கு பேரை அதட்டி, தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். எதிலும் எதிர்ப்பு உள்ள விவகாரங்களையே எடுத்து வாதாடுவார்கள். நண்பர்களுக்காகச் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களின் உண்மையான அன்பிற்காக ஏங்குவார்கள். சமுதாயத்தின் முன்னேற்றம், நாட்டு நடப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிப் பொது இடங்களில் காரசாரமாகப் பேசுவார்கள்.

உணவு விஷயத்தில் தாராளமானவர்கள்! சுவையான உணவு, இனிமையான காட்சி ஆகியவற்றிற்காகப் பண விரயம் செய்வார்கள். தங்களின் உடல்நலம், ஆரோக்கியம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, அதற்காக லேகியங்களையும், மாத்திரைகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.

தங்களுடைய அபிப்பிராயங்களைத்தான் மற்றவர்ளும் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். பிறர் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, எநத வழியையும் பின்பற்றத் தயங்க மாட்டார்கள். இருப்பினும், வாழ்க்கையில் வெற்றி பெறுவோமா என்ற வீண் பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் அவசரமும், ஆத்திரமும் உண்டு. தங்களைக் கண்டு பயப்படுபவர்களை, விரட்டிக் கொண்டே இருப்பார்கள். தங்களைக் கண்டு பயப்படாமல் இருப்பவரிடம் நயமாகப் பழகுவார்கள்.
சந்தேக குணமும், அதிகாரம் செய்யும் விருப்பமும் இருப்பதால், நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். தங்கள் முயற்சிகளில் அடுத்தவர் குறுக்கீட்டை விரும்பமாட்டார்கள். அவரிடம் வெறுப்பைக் காட்டுவார்கள். குடும்பத்திலும் இவர்களது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். எனவே, குடும்பத்திலும் இன்பம் குறைவுதான்.

இளமைப் பருவத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொள்வார்கள். சோம்பல் குணம்தான் இவர்களது சத்துரு! அதை விட்டுவிட வேண்டியது அவசியம். முன்கோபம் ஓரளவு இருக்கும். சமயங்களில் அடுத்தவரைத் திட்டிவிட்டுப் பின்பு வருந்துவார்கள்.

சாதாரணமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, தங்கள் குரலை உயர்த்திப் பேசித் தங்களின் வாதங்களை வற்புறுத்துவார்கள். ஒரே விஷயத்தைப் பற்றியே, பட்டிமன்றமாகப் பேசுவார்கள்.

தங்களது சொந்தப் புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படமாட்டார்கள். ஆனால் அனைத்தும் தெரிந்த மனிதர் இவர்தான் என்று உலகத்தார் பேச வேண்டும் என நினைப்பார்கள். பொது நல சேவை செய்வார்கள். அரசியல்வாதிகளில் வெறிபிடித்த இலட்சியவாதிகள் என்று இவர்களில் சிலர் மாறி விடுவார்கள். இவர்களது வருமானம் உயர உயரச் செலவும் அதிகமாகிக் கொண்டே வரும். எனவே, செலவு செய்வதில் நிதானம் தேவை. இவர்கள் மக்களை நிர்வகிக்கும் வித்தையை அறிந்தவர்கள். இதனால் போலீஸ், மேலாளர் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.

உடல் ஆரோக்கியம்:

இந்த நான்கு எண்காரர்கள் நடுத்தரமான உயரம் உடையவர்கள். வட்ட வடிவமான முகத்தோற்றமும், சற்றுப் பருமனான உடல் அமைப்பும் உண்டு. ஆழ்ந்த கண்கள் இருக்கும். தலைமுடி கருமையாகவும், அதே சமயம் அழுத்தமாகப் படியாமல், சற்றுச் சுருண்டும் காணப்படும். அதிகமான நோய்கள் இவர்களை அணுகாது. உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் நடந்து கொண்டால், ஆரோக்கியம் உறுதி!

அதிர்ஷ்ட தினங்கள் – Lucky Days:

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 ஆகிய தினங்களும், கூட்டு எண் 1 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவே. 28ந்தேதி நடுத்தரமான பலன்களையே கொடுக்கும். அதேபோன்று 9, 18, 27 ஆகிய தேதிக்கும். கூட்டு எண் 9 வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
அதே போன்று 4, 13, 22, 31 ஆகிய தேதிகள் தாமாகவே நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் தோல்வியே மிஞ்சும். அதே போன்று 8, 17, 26 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 8 வரும் தினங்களும் துரதிருஷ்டமானவை. 7, 16, 25 ஆகிய தேதிகளும் துரதிருஷ்டமானவைதான்.

அதிர்ஷ்ட இரத்தினம் – Lucky Gems:

கோமேதகம் அணிவது மிகவும் சிறப்பைத் தரும். சிபிமிழிழிகிவிளிழி ஷிஜிளிழிணிஷி மற்றும் பிணிஷிஷிளிழிகிஜிணி கற்களும் நல்ல பலன்களைத் தரும். இரத்தினக் கற்களில் மர நிறமுடைய கற்களை அணிய வேண்டும்.(கினிஹிகிவிகிஸிமிழிணி) (நீலநிறம்) கற்களும் அணியலாம்.

அதிர்ஷட நிறங்கள் – Lucky Colours:

நீலநிறம் மிகவும் சிறந்தது. நீலக்கோடுகள் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டமானது. இலேசான பச்சை, நீலம் உடைகளும் நல்லதுதான்.
கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும்.

முக்கியக் குறிப்பு:

சர்வ வல்லமை படைத்த இராகுவானவர். எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி, தன்னுடைய இஷ்டப்படியேதான் நடத்துவார். எனவே 4ந் தேதி பிறந்த அன்பர்கள் தங்களுடைய வாழ்க்கையில், எதிர்பாராத மாற்றங்களை (ஜிகீமிஷிஜிஷி) சந்திக்க வேண்டியது வரும். அந்த மாற்றங்களை எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், அதிர்ஷ்டங்கள் பின்பு தாமே வந்து சேரும்.

4-ஆம் தேதி பிறந்தவர்கள் :

இவர்கள் கரகரப்பாகப் பேசுவார்கள். கண்டிப்பும், அதிகாரமும் நிறைந்து பேசுவார்கள். இவர்களுக்குத் துணிச்சலும், பலமும் அதிகம். போலீஸ், போர் வீரர்கள் போன்று உடல்வாகு அமையும். அடிக்கடி இவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும். அதைக் கண் கலங்காமல், செயல்பட்டு வெற்றி அடைவார்கள். இளமையிலேயே திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது! குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு! தெய்வ பக்தியும் இருக்கும்.

13-ஆம் தேதி பிறந்தவர்கள் :

இவர்கள் துன்பங்களையே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பார்கள். உண்மை அதுவன்று! சோதனை இல்லையேல் சாதனை இல்லை. இவர்களது இளமைக் காலப்போராட்டங்கள் எல்லாம் பிற்காலத்து வசதியான வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துவிடும். காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும், விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியது வரும். இவர்கள் யாருக்கு உதவுகிறார்களோ, அவரே இவர்களுக்குத் துரோகம் செய்வார்கள். கடலில் அலை ஓய்வதில்லை. அதைப்போன்றுதான் இவர்களது பிரச்சினைகளும். இருப்பினும் தங்களின் கடும் உழைப்பால் பேரும் புகழும், பெருஞ்செல்வமும், மிகச் சிறப்பாகத் தேடிக் கொள்வார்கள். எதிர்பாராமல் வரும் துன்பங்களெல்லாம் எதிர்பாராமலேயே விலகி ஓடும். ஆணவம் கொண்டு செயலாற்றினால் துன்பம் நிச்சயம். நேர்மையும், கடுமையான உழைப்புமே இவர்களை உயர்த்தி விடும்.

22-ஆம் தேதி பிறந்தவர்கள்:

அதிக நண்பர்களும், நல்ல பேச்சு சாமர்த்தியமும் உண்டு. நிர்வாகத் திறமையும், பிடிவாதமும் உண்டு. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் துணிந்து இறங்கி விடுவார்கள். பின்பு அதனால் பிரச்சினைக்குள்ளாவார்கள். இவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இவரைச் சேர்ந்தவர்களே கவிழ்த்து விடுவார்கள். வீம்புக்காகச் சில செயல்களில் ஈடுபட்டால். தோல்விகளே மிஞ்சும். அரசியல், சினிமா, போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டு. தீய நண்பர்களைத் தெரிந்து அவர்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

31-ஆம் தேதி பிறந்தவர்கள் :

சுய திருப்தியே இவர்களுக்கு முக்கியமாக இருக்கும். பணம் இவர்களைத் தேடி வர வேண்டுமே தவிர, இவர்கள் பணத்தைத் தேடினால் கிடைக்காது. தீவிரத் தன்மையும் அதிகாரம் செய்வதும் இவர்கள் குணம். உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மனோசக்தி மிகுந்தவர்கள்.

ஆன்மிகம், சோதிடம், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டு. எதிரிகளைத் துணிவுடன் சந்திப்பார்கள். உலகத்தில் உள்ள பல விஷயங்களையும், இவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். மற்ற மனிதர்களை உடனே எடை போடும் சாமர்த்தியம் உண்டு. அரசியலில் ஈடுபட்டால் நல்ல பதவிகள் கிடைக்கும்.

எண்(4) இராகுவிற்கான தொழில்கள்:

இவர்களும் மனோ வேகம் நிறைந்தவர்களே! உடப்பயிற்சி, சர்க்கஸ் போன்ற உடல் சம்பந்தமான தொழிலும் ஒத்து வரும். றிஸிளி தொழில்கள் , ஊர் சுற்றிச் செய்யப்படும் தொழில்கள், யந்திரங்கள் மூலம் பொருள்கள் உற்பத்தி செய்தல், மெக்கானிக், மரத் தொடர்பான கைத்தொழில்கள், கால்நடைகள், நாய் போன்ற நாற்கால் பிராணிகளில் வியாபாரம் நன்கு அமையும்.

பேச்சில் சமர்த்தர்கள். பெரிய பேச்சாளர்களாகவும், அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். கட்டிடம் கட்டுதல், ஆட்களை விரட்டி வேலை வாங்குதல் தொழில்களும் இவர்களுக்கு ஒத்து வரும். .. மற்றும் அனைத்து வாகனங்கள் ஓட்டுதல் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மக்களுக்கு தினமும் தேவைப்படும் தொழில்கள், இன்சினியரிங் தொழிலாளர்கள், பத்திரிக்கைத் தொழில், ஆகியவையும் ஒத்து வரும். ரெயில்வே, பஸ், விமான நிலையங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அமையும்.

வீடு, வாகனம் புரோக்கர்கள், வக்கீல்கள், ஹாஸ்டல், ஹோட்டல் நிர்வாகிகளாகவும், மதுபானங்கள் விற்பனை, தாதா போன்ற வழியில் ஈடுபடுதல் (சிலர்) ஆகியவையும் அமையும்.

மீன், இறைச்சி வியாபாரம் மின்சாரம், இலக்கியம் தொடர்பான வேலைகள், மாந்தரீகத் தொழில்கள், ஆடு,மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில், விஷ வைத்தியம் செய்தல், வித்தைகள் செய்து சம்பாதித்தல் போன்றவையும் அமையும். சிலர் சட்டத்திற்குப் புறம்பான தொழில்களிலும் ஈடுபடுவார்கள். எண்ணின் பலம் குறையும் போது மற்றவர்களை விரட்டிப் பிழைக்கவும், ஏமாற்றவும் தயங்கமாட்டார்கள்

4ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
ராமானுஜர் : 04.04.1917
கணிதமேதை ராமானுஜம் : 22.12.1887
திருப்பூர் குமரன் : 04.10.1904
சர்தார் வல்லபாய் படேல் : 31.10.1875
தாதாபாய் நௌரோஜி : 04.09.1825
ராஜாராம் மோகன்ராய் : 22.05.1772
« Older Entries


Fees Details