Browsing ஆன்மீகம்

லெமூரியா கண்டம் இந்தியப்பெருங்கடலில்! [ முதல் கடவுள் ஈசன் ஆண்டபகுதி]

November5
முக்காலம் அறிந்தவன், மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியாம் பரமேஸ்வரன் 2000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட லெமூரியா கண்டம் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. ராமேஸ்வரம் காரணப்பெயரே..!

________________________________________
ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக! இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. 
உண்மை தான் உலகிதிலேயே பண்டைய நாகரீகம் தமிழர்களுடையது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
 

 

 A submerged continent found இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த உலகமே ஒரே நிலப்பரப்பாக இருந்தது.
எல்லா கருமத்தையும் வெள்ளைக்காரன் சொன்னதான் நாங்க ஒத்துக்குவோம்! 

இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. “ஆதித் தமிழர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்துக்கும் தெற்கே” கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அப்படியானால் நம்ம லெமூரியா கண்டம்தான் அந்த மொரிஷியாவா என்ற தேடல் தொடங்கியிருக்கிறது…இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்!

ஆம். அதிலென்ன சந்தேகம். மேலும் அந்த கண்டத்தை ஆண்டது “மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான  ஈஸ்வரன் ” தான் என்பது நிரூபிக்கப்பட்டது. அதானால் தான் ஈஸ்வரன் குடிகொண்ட அந்த கடல் கொண்ட ஊருக்கு ராமேஸ்வரம் என்ற காரணப் பெயர் வந்தது.

பின்குறிப்பு:
சிவபெருமான் 2000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இதை ஆண்டிருக்க முடியுமா என்ற கேள்வி தானாக வரும். வந்தா என்ன? தீவிர சைவர்கள் இந்த கோட்டைப் பிடித்துக்கொண்டு ரோடு போட வேண்டியது தான். 3500 வருடங்களுக்கு முன்பு “மும்மூர்த்திகளில் ‘ஒரு’ மூர்த்தியான கிருஷ்ணா ‘குஜராத்தில்’ ஆண்ட போது, மும்மூர்த்திகளில் ‘முதல்’ மூர்த்தியாம் பரமேஸ்வரன் 2000 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு ‘தமிழ்நாட்டில்’ ஆண்டிருக்க மூடியதா என்ன? இது புளுகு என்றால் அதுவும் புளுகு தான்.

சிவபெருமான் இந்துக்களுக்கு எவ்வவளவு வேண்டப்பட்டவராக இருந்தாலும், கிருஷ்ணா தான் இந்துத்வாவிற்கு உயிர்…புரியவில்லையா?

கடலுக்கு அடியில் உள்ள த்வாரகாவின் சூட்சமம்.
கடவுள் கிருஷ்ணா-> பகவத் கீதை-> இந்துக்களின் புனிதநூல்->ஆதி இந்துகளின் ஒரே தேசம்-> இந்தியா! 

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
‘கிருஷ்ணா  த்வாரகாவில்’ ஆட்சி செய்தது உண்மை தான் போல!
ஏனென்றால், “மற்ற மதத்தை சார்ந்தவர்கள் யாரும் இதை மறுக்கவில்ல…!” 
நானும் இதை மறுக்கவில்லை
அதேசமயம், உலகத்தின் முதல் கடவுள் ‘பரமேஸ்வரன்’ 2000 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு ‘தமிழ்நாட்டில்’ ஆண்டார் என்பதை பதிவு செய்கிறேன். 
_______________________________

 

ஆகவே சிவபெருமான் நுண்ணுயிராக அவதாரம் எடுத்து லெமூரியாவை ஆண்டார் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்க தயாராக இருக்கிறோம். அப்போதும் தமிழில் பதிகம் பாடி, பூசை புனஸ்காரம் செய்து தொழுதன நுண்ணுயிர் பக்தர்கள் என்பதையும் விளக்குவோம்!

இதனை அன்றே கூறினார் “சிவபுராண திருவாசகத்தில்” 
வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
வாழ்த்துவனே.

ஆகவே 3500 ஆண்டுகள் முன்பு ஹோமோ செஃபியன் ரூபத்தில் ஆண்ட வைணவ ஏக இறைவன் கிருஷ்னரை விட 2000 மில்லியன் ஆண்டுகள் முன் நுண்ணுயிர் ரூபத்தில் ஆண்ட சைவ ஏக இறைவன் சிவபெருமானே சிறந்தவர்...! 

தென்னாடு உடைய சிவனே போற்றி
எந்நாட்ட‌வருக்கும் இறைவா போற்றி!”

நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், மச்ச அவதாரம் எல்லாம் கடவுள் கிருஷ்ணா சமீபத்தில் எடுத்த அவதாரங்கள்; சிவபெருமான் 2000 மில்லியன் ஆண்டுகள் முன் “நுண்ணுயிர் அவதாரம்எடுத்த அவதார புருஷன்..!

108 நாட்டிய கரணங்கள்

November5

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்.
27-நட்சத்திரம்
108-பாதம்

லோலிதம்

ரேவதி-1ம்பாதம்

நாகாபஸர்ப்பிதம்

ரேவதி-2ம்பாதம்

சகடாஸ்யம்

ரேவதி-3ம்பாதம்

கங்காவதரணம்

ரேவதி-4ம்பாதம்

108 நாட்டிய கரணங்கள்

November5

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்.
27-நட்சத்திரம்
108-பாதம்

ஸம்ப்ராந்தம்

உத்திரட்டாதி-1ம்பாதம்

விஷ்கம்பம்

உத்திரட்டாதி-2ம்பாதம்

உத்கட்டிதம்

உத்திரட்டாதி-3ம்பாதம்

விருஷபக்கிரீடிதம்

உத்திரட்டாதி-4ம்பாதம்

108 நாட்டிய கரணங்கள்

November5

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்.
27-நட்சத்திரம்
108-பாதம்

ஏலகாக்கிரீடிதம்

பூரட்டாதி-1ம்பாதம்

ஊருத்விருத்தம்

பூரட்டாதி-2ம்பாதம்

மதஸ்கலிதம்

பூரட்டாதி-3ம்பாதம்

விஷ்ணுக்கிராந்தம்

பூரட்டாதி-4ம்பாதம்

108 நாட்டிய கரணங்கள்

November5

 

 

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்

சதயம்-1ம்பாதம்

தலஸங்கட்டிதம்

ஜநிதம்

சதயம்-2ம்பாதம்

அவகித்தகம்

சதயம்-3ம்பாதம்

நிவேசம்

சதயம்-4ம்பாதம்

108 நாட்டிய கரணங்கள்

November5

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்

சிம்மவிக்ரீடிதம்

அவிட்டம்-1ம்பாதம்

ஸிங்காகர்ஷிதகம்

அவிட்டம்-2ம்பாதம்

உத்ருத்தம்

அவிட்டம்-3ம்பாதம்

உபசிருதகம்

அவிட்டம்-4ம்பாதம்

108 நாட்டிய கரணங்கள்

November5

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்

நிதம்பம்

திருவோனம்-1ம்பாதம்

ஸ்கலிதம்

திருவோனம்-2ம்பாதம்

கரிஹஸ்தகம்

திருவோனம்-3ம்பாதம்

பிரஸர்ப்பிதகம்

திருவோனம்-4ம்பாதம்

108 நாட்டிய கரணங்கள்

November4

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்

சர்ப்பிதம்

உத்ராடம்-1ம்பாதம்

தண்டபாதம்

உத்ராடம்-2ம்பாதம்

ஹரிணப்லுதம்

உத்ராடம்-3ம்பாதம்

பிரேங்கோலிதம்

உத்ராடம்-4ம்பாதம்

108 நாட்டிய கரணங்கள்

November4

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்

பூராடம்-1ம்பாதம்

அர்த்தசூசி

சூசிவித்தம்

பூராடம்-2ம்பாதம்

அபக்ராந்தம்

பூராடம்-3ம்பாதம்

மயூரலலிதம்

பூராடம்-4ம்பாதம்

108 நாட்டிய கரணங்கள்

November4

சிவனின் நாட்டியங்கள்
ஒவ்வொரு நாட்டியமும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திர பாதங்களைக்குறிக்கும்

பார்சுவஜாநு

மூலம்-1ம்பாதம்

கிருத்ராவலீனகம்

மூலம்-2ம்பாதம்

சன்னதம்

மூலம்-3ம்பாதம்

சூசி

மூலம்-4ம்பாதம்

« Older EntriesNewer Entries »


Fees Details