அங்கரிசர்

August20

அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு உதத்யா, சம்வர்தனா, பிரஹஸ்பதி என்று மூன்று மகன்கள் இருந்தனர். பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரியில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாக கூறப்படுகிறது. புத்தர் இவர் வளி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.

அஷ்டாங்க நமஸ்காரம்அஷ்டாங்க நமஸ்காரம் என்பது இந்து சமய வழிபாட்டில் ஆண்களுக்கு உரிதான இறை வணக்கமாகும். இம்முறையில் ஆணின் எட்டு உடற்பாகங்களும் தரையில் படும்படியாக இறைவனை வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகியவை அந்த உடல்பாகங்களாகும். [1

சப்தரிஷிகள்

சப்தரிஷிகள் என்பவர்கள் வேதங்களில் குறிப்பிடப்பட்ட ஏழு ரிஷிகளைக் குறிக்கும் கூட்டு சொல்லாகும். பல்வேறு காலங்களில் பல்வேறு புராணங்கள் வெவ்வேறு ரிஷிகளை சப்தரிஷிகள் என்று கூறியுள்ளன. இந்த ரிஷிகளிளிருந்தே கோத்திரம் என்ற முறை தோன்றி உள்ளது.

சப்தரிஷிகள் எனப்படுவோர்:

  1. விசுவாமித்திரர்
  2. காசிபர்
  3. பரத்வாஸர்
  4. கௌதமர்
  5. அகத்தியர்
  6. அத்ரி
  7. பிருகு

Email will not be published

Website example

Your Comment:Fees Details